சினிமாவில் நாம் எத்தனையோ காதல் ஜோடிகளை பார்த்திருப்போம். அதில் ஒரு சில ஜோடிகளை பார்க்கும்போது அவர்களின் கெமிஸ்ட்ரி ரொம்பவும் ரியலாக இருக்கும். இதனால் அடுத்தடுத்த படங்களில் சேர்ந்து நடிக்கும் அந்த ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறியதுண்டு.
அந்த வகையில் அஜீத்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா உள்ளிட்ட சில ஜோடிகள் நிஜ வாழ்விலும் சிறந்த காதல் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக ஒரு காதல் ஜோடி தமிழ் சினிமாவில் இருந்தது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
அவர்கள் தான் தமிழ் சினிமாவின் முதல் காதல் ஜோடிகளாக இருந்துள்ளனர். கடைசிவரை காதலில் போராடி ஜெயிக்க தம்பதிகளும் அவர்கள் தான். தமிழ் திரையுலகில் பல புகழ்பெற்று திகழ்ந்த பியூ சின்னப்பா மற்றும் சகுந்தலா தான் அந்த ஜோடி.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்ட பியூ சின்னப்பா 1942 ஆம் ஆண்டு பிரித்திவிராஜன் என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்போது அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் சகுந்தலா. அந்தப் படத்தில் நடிக்கும் போதே இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.
அதன் பிறகு பல தடைகளை தாண்டி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ராஜ் பகதூர் என்ற மகனும் இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு சகுந்தலா திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
மனமொத்த சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி தான் தமிழ் திரையுலகின் சிறந்த மற்றும் முதல் காதல் ஜோடிகளாக இருக்கின்றனர். ஆனால் திருமணமாகி சில வருடங்களிலேயே பியூ சின்னப்பா உடல் நல குறைவின் காரணமாக திடீரென்று மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 36 மட்டுமே. குறுகிய காலம் மட்டுமே வாழ்ந்தாலும் அவருடைய காதல் தான் இப்போதைய நட்சத்திர ஜோடிகளுக்கு முன்னோடியாக இருக்கிறது.