திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

60-70களில் முதன்முதலாக லட்சத்தில் சம்பளம் வாங்கிய 3 பேர்.. எம்ஜிஆர், சிவாஜி கூட இல்லப்பு

அஜித், விஜய் போன்ற உச்ச நடிகர்கள் இன்று நூறு கோடிகள் சம்பளம் வாங்கும் நேரத்தில் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் 5 ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர்கள் கூட இருக்கிறார்கள். அந்த காலத்தில் தமிழ் சினிமா நாடகங்கள் மூலமே வளர்ச்சி பெற்றது. அப்படி நாடகத்தில் இருந்து வந்தவர்கள் பிற்காலத்தில் சினிமாவில் பல லட்ச ரூபாய்கள் சம்பளம் பெற்றார்கள்.

ஆரம்பத்தில் நாடகங்கள் மூலம் தொடங்கியது தமிழ் சினிமா. ஹரிதாஸ், என்எஸ் கலைவாணர், எம் ஆர் ராதா. தங்கவேலு போன்ற நடிகர்கள் எல்லாம் நாடக கம்பெனி மூலம் தான் தமிழ் சினிமாவிற்குள் வந்தனர்.

Also Read: மீள முடியாத துயரில் இருந்த சரோஜாதேவி.. கோபத்தை மறந்து எம்ஜிஆர் செய்த பேருதவி

இன்றும் கூத்துப்பட்டறை என்ற நடிப்பு கல்லூரியில் இருந்து பல நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு வருகின்றனர். அப்படி நாடக கம்பெனியில் வந்த மூன்று நடிகர்கள் பின்னர் சினிமாவில் கோலோச்சி முதல் முதலில் சினிமா வரலாற்றில் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளனர்.

தங்கவேலு: 1950 முதல்1970 வரை தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் ஆட்சி புரிந்தவர் தங்கவேலு. இப்போது வடிவேலுவை விட பலமடங்கு ஹுமர் சென்ஸ் உடையவராம். இவர்தான் முதல் முதலில் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினாராம். இவர் சம்பளம் வாங்கிய படம் பாக்கியவதி என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சாகும்வரை மறுக்கப்பட்ட ஹீரோ வாய்ப்பு.. எம்ஜிஆர், சிவாஜியுடன் கேரக்டர் ரோல் செய்தே விருதுகளை குவித்த நடிகர்

கே பி சுந்தராம்பாள்: அவ்வையார், திருவிளையாடல் போன்ற படங்களில் கலக்கிய கே.பி.சுந்தராம்பாள் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிறந்த பாடகியாக நாடகத்துறையில் ஆட்சி செய்துள்ளார்.

சந்திரபாபு: எம்ஜிஆர், சிவாஜி கணேசனுக்கு முன்னாடியே இவர் வாங்கிய சம்பளம் ஒரு லட்சம் ரூபாய். தனது தனித்துவமான குரல் மூலமும், நடனத்தின் மூலமும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் சந்திரபாபு.

Also Read: சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் களமிறங்கும் ஹாலிவுட் ஹீரோ.. அட்ராசக்க!

Trending News