செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வித்தியாசமான டைட்டிலுடன் முதல் முறையாக ஹீரோவான விஜய் டிவி புகழ்.. யோகி பாபுவை தொட்டுருவாரு போல

Vijay Tv Pugazh: விஜய் டிவிக்கு மிகப்பெரிய ராசி ஒன்று இருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம் இந்த சேனலில் இருந்து வந்த பாதி பேர் பேரும், புகழும் சம்பாதித்து பிரபலமாகி இருக்கிறார்கள். அந்த வகையில் நிறைய நடிகர்கள் மற்றும் காமெடியன்களை நாம் உதாரணமாக சொல்லலாம்.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமாகி வந்த புகழ், தற்போது ஹீரோவாகவும் களமிறங்கி விட்டார். சின்ன கேரக்டர் மூலம் வெள்ளி திரைக்கு வந்த இவர் தொடர்ந்து ஒரு சில படங்களில் காமெடியனாக நடித்தார். அந்த வகையில் தற்போது முதல் முறையாக வித்தியாசமான டைட்டிலுடன் ஹீரோவாக மாறி இருக்கிறார்.

Also read: சும்மா இருந்த கேப்டனை சொறிஞ்சு விட்ட விஜய் டிவி.. நாக்கை துருத்திக் கொண்டு வெளுத்து வாங்கிய சம்பவம்

யோகி வீர் பிக்சர்ஸ் சார்பில், ஸ்ரீராம் தயாரிக்கும் படத்தில் கமிட்டாய் இருக்கிறார். இப்படத்தை எம்.ஜே இளன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் கதையானது, காதலில் விழுந்து தன்னை வருத்திக் கொள்ளும் இளைஞர்களை பற்றி எடுத்துச் சொல்கிறது.

அதாவது காதலிப்பது தவறில்லை, ஆனால் காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு எதிர்காலத்தை வீணடிப்பது தவறு என்ற விதமாக இப்படத்தை எடுக்கப் போகிறார். மேலும் இந்த கதையை இக்காலத்திற்கு ஏற்ற மாதிரி நகைச்சுவை கலந்து சுவாரசியமாக இருக்கப் போவதாக கூறியிருக்கிறார்.

Also read: டிஆர்பி மங்கியதால் விஜய் டிவியை விலை பேசிய 3 பிரம்மாண்ட நிறுவனங்கள்.. அதிக தொகை யார் தெரியுமா?

மேலும் இப்படத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் புகழ்பெற்ற வசனமான “துடிக்கிறது மீசை” என்பதையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் புகழுக்கு கதாநாயகியாக மூன்று நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். யோகிதா, வர்ஷினி, அக்ஷயா என மூன்று புது முக நடிகைகள் அறிமுகம் ஆகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து புகழுக்கு இப்படத்தின் மூலம் ஹீரோவுக்கான இமேஜ் கிடைக்குதோ இல்லையோ, கண்டிப்பாக வெள்ளித் திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு போல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனை தொடர்ந்து இன்னும் இவரை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

Also read: டிஆர்பி இல்லாததால் ஊத்தி மூடும் விஜய் டிவியின் நிகழ்ச்சி.. பட்ட அசிங்கம் எல்லாம் போதும்

Trending News