திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

வில்லனாய் கலக்கிய ஐந்து 80ஸ் ஹீரோக்கள்.. தனுஷிற்கு தண்ணி காட்டிய கார்த்திக்

Actor Karthik: 80- 90ஸ்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர்கள் தற்பொழுது இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வில்லனாய் களமிறங்கியுள்ளனர்.

அவ்வாறு நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் இவர்கள் மேற்கொண்ட வில்லன் கதாபாத்திரத்திலும் சிறப்புற நடித்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக மிரள விட்ட ஐந்து 80ஸ் ஹீரோக்களை பற்றி இத்தொகுப்பு காணலாம்.

Also Read: முதல் படத்தில் ஹிட் கொடுத்தும், வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் 5 நடிகைகள்.. வாய்ப்புக்காக ஐட்டம் நடிகையாக மாறிய கிரண்

கார்த்திக்: தன் எதார்த்தமான நடிப்பால் நவரச நாயகன் என அழைக்கப்பட்ட கார்த்திக் அக்காலத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். அவ்வாறு இருக்க, 2015ல் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அனேகன். இப்படத்தில் தனுஷிற்கு தண்ணி காட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். ஹீரோவாய் கலக்கிய இவரா இது என வியக்கும் அளவிற்கு இவரின் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

ரகுமான்: அக்காலகட்டத்தில் எண்ணற்ற படங்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் தான் ரகுமான். அதை தொடர்ந்து சமீப காலமாக நெகட்டிவ் ரோலில் களம் இறங்கியுள்ளார். அவ்வாறு ராம், தூத்துக்குடி, பில்லா, சிங்கம் 2 போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். இக்கால நடிகர்களுக்கு சரி சமமாக இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Also Read: தென்னைக்கு ஆசைப்பட்டு திண்ணையை பறிகொடுத்த நடிகை.. நயன்தாரா கேரக்டருக்கு ஆசைப்பட்டு கேரியரை தொலைத்த சம்பவம்

சரத்குமார்: 80ஸ் காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அதன்பின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர்தான் சரத்குமார். சமீப காலமாக வில்லன் கதாபாத்திரத்திற்கு ஆர்வம் காட்டி வரும் இவர் கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்த ருத்ரன் படத்தில் நெகட்டிவ் ரோலில் சிறப்புற நடித்திருப்பார். மேலும் பொன்னின் செல்வன் படத்திலும் இவரின் நெகட்டிவ் ரோல் பெரிதும் பேசப்பட்டது.

அர்ஜுன்: 80ஸ் காலகட்டத்தில் முன்னணி ஆக்சன் ஹீரோவாக இடம் பெற்றவர் தான் அர்ஜுன். அவ்வாறு இருக்க, தற்பொழுது தன் உடல் அமைப்பைக் கொண்டு வில்லன் கதாபாத்திரத்தில் இடம் பெற்று வருகிறார். இவர் நிபுணன் மற்றும் இரும்புத்திரை போன்ற படங்களில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் நெகட்டிவ் ரோலில் அசத்திருப்பார்.

Also Read: விவாகரத்தை ட்ரெண்ட் ஆக்கிய 5 டிவி தொகுப்பாளர்கள்.. ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண உறவு!

அரவிந்த்சாமி: அக்கால கட்டத்தில் முன்னணி கதாநாயகனாகவும், சாக்லேட் பாயாகவும் வலம் வந்தவர் அரவிந்த்சாமி. சமீப காலமாக இவர் மேற்கொள்ளும் நெகட்டிவ் கதாபாத்திரங்களுக்கும் மக்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றார். அவ்வாறு 2015ல் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தனி ஒருவன். இப்படத்தில் பணத்திற்காக இவர் மேற்கொண்ட கதாபாத்திரம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து கஸ்டடி என்னும் தெலுங்கு படத்திலும் இவர் இடம் பெற்றுள்ளார்.

Trending News