புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இன்றும் இளசுகள் ஜொள்ளு விடும் ஐந்து 80ஸ் ஹீரோக்கள்.. பிரபுதேவாக்கு முன்னரே போட்ட பிரேக் டான்ஸ்

80ஸ் 90களில் தமிழ் சினிமாவில் தாங்கள் நடித்த படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஹீரோக்கள், காலங்கள் கடந்தும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தலைமுறை இளசுகளையும் கூட தங்களது நடனம் மற்றும் நடிப்பின் மூலம், ஜொள்ளு விட வைத்த 5 ஹீரோக்களை இங்கு காணலாம்.

ராம்கி: சினிமாவில் சின்ன பூவே மெல்ல பேசு என்னும் படத்தில் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் அதன் பிறகு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதிலும் இவரின் ஹேர் ஸ்டைலுக்காகவே பல பெண்கள் ரசிகர்களாக இருந்தனர். இவர் கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஆக்சன் படத்தில் விஷாலுக்கு அண்ணனாக நடித்துள்ளார். இன்றைய தலைமுறை ரசிகர்களையும் தனது நடிப்பின் மூலம் கட்டிப்போட்டு உள்ளார்.

Also Read: செகண்ட் இன்னிங்ஸ் கைகொடுக்காத 5 நடிகர்கள்.. ராம்கி முதல் ஒதுக்கப்பட்ட சாக்லேட் பாய்ஸ்

ரகுமான்: அபுதாபியில் பிறந்த இவர் மலையாள படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதன் பிறகு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புதுப்புது அர்த்தங்கள் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதிலும் எவர்கிரீன் நடிகராக வலம் வரும் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ரகுமான். அதுமட்டுமல்லாமல் தனது அசால்டான நடனத்தின் மூலம் ரசிகர்களை கிரங்கடித்து இருப்பார்.

மம்முட்டி: மலையாள பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வருபவர் தான் நடிகர் மம்முட்டி. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த தளபதியில் தனது நடிப்பின் மூலம் பட்டையை கிளப்பியுள்ளார்.

Also Read: தமிழில் மார்க்கெட்டை பிடித்த மம்முட்டியின் 5 படங்கள்.. இன்றுவரை நட்பு பாராட்டும் தளபதி பட தேவா

ஜெயராம்: மலையாள நடிகரான இவர் கோகுலம் என்ற  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதிலும் முறைமாமன் படத்தில் கவுண்டமணியுடன் இவர் அடிக்கும் லூட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தனது அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரசாந்த்: இவரின் அழகும், துள்ளலும் சேர்ந்த நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் பெண் ரசிகைகளை, வெகுவாகவே கவர்ந்தது என்றே சொல்லலாம். அதிலும் 90ஸ் இல் சாக்லேட் பாயாகவே வலம் வந்த பிரசாந்த் பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். அதிலும் தனது நடனத்தின் மூலம் பிரபு தேவாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: பெண் ரசிகைகளால் அதிகமாக ரசிக்கப்பட்ட 6 நடிகர்கள்.. திருமணத்தால் ஹீரோவிலிருந்து ஜீரோவான பிரஷாந்த்

Trending News