ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிறக்கும்போதே தங்கத்தட்டில் பிறந்த 5 நடிகர்கள்.. கேடு கெட்ட பழக்கத்தால் சொத்தை இழந்த ஜீவன்

Five Actors Born In A Rich Family: சினிமாவுக்கு வந்து தான் பணம் சம்பாதித்து தனது குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற நிலை சில நடிகர்களுக்கு இல்லை. பிறக்கும்போதே கோடீஸ்வரராக தங்கத்தட்டில் பிறந்த அந்த நடிகர்கள் விருப்பம் அல்லது பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு வசதியான குடும்பத்தில் பிறந்த 5 நடிகர்களை பார்க்கலாம்.

அருள்நிதி : பெரும்பாலும் த்ரில்லர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருள்நிதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் மற்றும் முக தமிழரசுவின் மகன் ஆவார். சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக நடிகராக இவர் அவதாரம் எடுத்திருந்தார்.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷை ஓரம் கட்டிய அருள்நிதி.. 3வது நாள் வசூலில் பெருத்த அடி வாங்கிய தீராக் காதல், மூர்க்கன்

ஜீவன் : பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் ஜீவன். மேலும் நான் அவன் இல்லை படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் ஜீவன் இயற்பெயர் விஜயபாஸ்கர் ரங்கராஜ். இவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டு பிள்ளை. ஆனால் சினிமாவுக்கு வந்த பிறகு சில கெட்ட பழக்கங்கள் காரணமாக தனது பாதி சொத்துக்களை இழந்துவிட்டார்.

அரவிந்த்சாமி : பெண்களுக்கு பிடித்த கதாநாயகனாக தற்போது வரை வளம் வந்து கொண்டிருப்பவர் அரவிந்த்சாமி. அந்த காலத்தில் ஹீரோவாக நடித்து அசத்தி வந்த நிலையில் இப்போது வில்லனாக மிரட்டி வருகிறார். இந்நிலையில் அரவிந்த்சாமியின் தந்தை தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமார் ஆவார். ஆகையால் அரவிந்த்சாமியும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.

Also Read : சாஃப்ட்வேர் பிசினஸில் பின்னி பெடல் எடுக்கும் 5 நடிகர்கள்.. பிள்ளையார் சுழி போட்ட அரவிந்த்சாமி

நவ்தீப் : தமிழில் அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நவ்தீப். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிகம் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி தொலைக்காட்சியிலும் இவரது பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்நிலையில் நவ்தீப் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தவர் தான்.

உதயநிதி : உதயநிதி ஸ்டாலின் சினிமாவுக்கு வந்ததே தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள தான். அதாவது மு கருணாநிதி பேரனும் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் தான் உதயநிதி. சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சில வருடங்கள் படங்களில் நடித்த உதயநிதி இப்போது அமைச்சராக உள்ளார்.

Also Read : உதயநிதிக்காக தலையை கொடுத்து அவமானப்பட்ட பிரபலம்.. கூட இருந்து குழி வெட்டிய மாரி செல்வராஜ்

Trending News