திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சினிமா கைவிட்டாலும் பெத்த லாபம் பார்க்க ஹோட்டல் நடத்தும் 5 பிரபலங்கள்.. மதுரையையே மணக்கச் செய்யும் குமரேசன்

சினிமா என்பது ஒரு நிரந்தரம் இல்லாத தொழில் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் குறிப்பிட்ட காலம் வரை தான் அவர்களது மார்க்கெட் இருக்கும். எப்போது ஏறும், இறங்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இதனால் கைவசம் மற்ற தொழில்களையும் வைத்துக் கொள்கிறார்கள். அப்படி சினிமா கைவிட்டாலும் பெத்த லாபம் பார்க்க ஹோட்டல் நடத்தும் 5 நடிகர்களை இப்போது பார்க்கலாம்.

ஜீவா : ஜீவாவுக்கு இப்போது எந்த படமும் வெற்றி பெறவில்லை. ஆரம்பத்தில் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்தி கொண்டாலும் இப்போது தொடர் பிளாப் காரணமாக மார்க்கெட்டை இழந்து உள்ளார். ஆனாலும் டீ நகரில் One mb என்ற பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்றை நடத்தி அதன் மூலம் ஜீவா நன்கு கல்லா கட்டி வருகிறார்.

Also Read : ஜீவா அப்பாவிடம் பயங்கரமா திட்டு வாங்கின நயன்தாரா.. படப்பிடிப்பு நிற்கும் நிலையில் இருந்த ஈ படம்

ஆர்யா : சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படம் எதுவும் போகவில்லை. ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இவர் அண்ணா நகரில் தனக்கு சொந்தமாக sea shell என்ற ஹோட்டல் வைத்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.

கருணாஸ் : நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமான கருணாஸ் அதன் பிறகு ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்தார். இப்போது அரசியல்வாதியாக செயல்பட்டு கொண்டிருக்கும் கருணாஸ் சாலிகிராமத்தில் karunas naan என்ற உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். அவர் மனைவி கிரேஸ் கருணாஸ் சிறப்பாக சமைப்பார் என்பது குக் வித் நிகழ்ச்சி மூலமே அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

Also Read : துபாயில் குழந்தையுடன் ஷாப்பிங் செய்த சாயிஷா.. மளமளவென வளர்ந்து நிற்கும் ஆர்யா மகளின் வைரல் புகைப்படம் 

ஆர்கே சுரேஷ் : இவர் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்த நிலையில் இப்போது கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சினிமாவை தாண்டி இவர் வேறு தொழில்களில் நிறைய முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் கேகே நகரில் வாங்க சாப்பிடலாம் என்ற ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

சூரி : காமெடி நடிகராக பல படங்களில் கலக்கி வந்த சூரி சமீபத்தில் விடுதலை படத்தில் குமரேசனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் கடந்த ஆண்டு சூரி சென்னை மற்றும் மதுரையில் அம்மன் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்கி இருந்தார். மேலும் மதுரையே மணக்கும் அளவுக்கு இவரது ஹோட்டல் பட்டையை கிளப்பி வருகிறதாம்.

Also Read : சீரியலில் இருந்து சினிமாவில் சாதித்த 6 நடிகர்கள்.. விடுதலை குமரேசனாக முதல்படி எடுத்து வைத்த சூரி

Trending News