ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

போலீஸ் வரை சென்று அசிங்கப்பட்ட 5 நடிகர்களின் மனைவிகள்.. நயன்தாராவை அடித்த பிரபுதேவாவின் மனைவி

பொதுவாக சினிமா பிரபலங்களைப் பற்றிய சின்ன விஷயங்கள் கூட வெளியில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி விடுகிறது. இப்படி இருக்கும் சூழலில் நடிகர்களின் மனைவி சிலர் தனது கணவனை போலீஸ், கேஸ் என அசிங்கப்படுத்தி உள்ளனர். அவ்வாறு மிக பூதாகரமாக மாறிய ஐந்து பிரச்சனைகளை இப்போது பார்க்கலாம்.

சரவணன் : சித்தப்பு என்று சொன்னாலே நமக்கு சற்றென்று ஞாபகத்துக்கு வருவது பருத்திவீரன் சரவணன் தான். இவரது முதல் மனைவி சூர்யா ஸ்ரீ தன்னை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

Also Read : நயன்தாராவை ஓரம் கட்ட நினைத்த நடிகை.. கரியை பூசி அனுப்பிய 3 இயக்குனர்

கிருஷ்ணா : இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி தான் நடிகர் கிருஷ்ணா. இவர் 2014 ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹேமலதா கிருஷ்ணா மீது அடுக்கடுக்கான புகார்களை கொடுத்திருந்தார். கடைசியில் தன்னை நிரூபித்து இந்த புகாரிலிருந்து கிருஷ்ணா வெளியே வந்தார்.

பிரசாந்த் : ஒரு காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவரது கேரியர் முற்றிலுமாக போவதற்கு பிரசாந்தின் திருமணம் தான் காரணமாக இருந்தது. அதாவது தனது தந்தையின் விருப்பப்படி ஒரு பெண்ணை பிரசாந்த் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது பின்பு தான் தெரியவந்தது. அதன் பின்பு கிரகலட்சுமி, பிரசாந்த் இருவருமே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Also Read : நடிக்காமலேயே 5 தலைமுறைக்கு சேர்த்து வைத்த பிரசாந்த்.. வியக்க வைக்கும் சொத்து விவரம்

தாடி பாலாஜி : சின்னத்திரை நடிகரான தாடி பாலாஜி நித்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். குடித்துவிட்டு தாடி பாலாஜி தன்னை அடிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் நிதியா வழக்கு தொடர்ந்திருந்தார். இப்போது வரை இந்த பிரச்சனை முடிவு பெறாமல் தொடர்கதையாக இருந்து வருகிறது.

பிரபுதேவா : நடன இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபுதேவா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் பிரச்சனை செய்தார். அடிதடி வரை இந்த பிரச்சனை சென்ற நிலையில் நயன்தாரா பிரபுதேவாவை விட்டு பிரிந்தார்.

Also Read : 4 கோடி சம்பளம், நடுத்தெருவில் விட்ட பிரபுதேவா.. என்னது கடைசியா நடிச்ச 5 படமும் சோலி முடிஞ்சிச்சா!

- Advertisement -

Trending News