வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சினிமாவை விட்டு காணாமல் போன 5 நடிகைகள்.. மீண்டும் களத்தில் இறங்கும் சூப்பர் ஸ்டார் பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் சில  காரணங்களால் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார்கள். ஆனால் இப்பொழுது மீண்டும் நடிப்பதற்காக முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர்களுடன் படங்களில் நடிப்பதற்கு களத்தில் இறங்கி உள்ளார்கள்.

ஸ்ருதி ஹாசன்: இவர் தனது அப்பாவை போல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து பின்பு தந்தை இயக்கத்தில் வெளிவந்த ஹேராம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின்பு ஒரு முன்னணி நடிகையாக நிலை நிறுத்திக் கொண்ட இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடத்தி மிகவும் பிரபலமானார். அதன் பின் தமிழ் படங்களில் நடிப்பது மிகவும் குறைந்துவிட்டது. இப்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் இவர் விட்ட இடத்தை பிடிப்பதற்காக ஒரு வெற்றி இயக்குனருடன் கைகோர்க்கிறார்.

Also read: இனி இங்க நடிக்க மாட்டேன் என ஓடிய 5 ஹீரோயின்கள்.. அக்கட தேசத்தில் தாத்தா வயது நடிகருடன் ஜோடி போட்ட ஸ்ருதி

ஸ்ருஷ்டி டாங்கே: இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான காதலாகி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு 2011 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் திரைப்படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தார். இதைத் தொடர்ந்து தமிழில் தர்மதுரை, நவரச திலகம், வில் அம்பு போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பரிச்சயமானார். பின்பு தெலுங்கு, மலையாள படங்களில் அதிக ஈடுபாடு கொண்டு நடிக்கப் போய்விட்டார். இதனை அடுத்து தற்போது தமிழில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதற்காக விஜய் டிவி தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 4 இல் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.

ரெஜினா கசாண்ட்ரா: இவர் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், தலைவி போன்ற படங்களில் நடித்து நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். பின்பு தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளதால் அங்கே பிஸியாகிவிட்டார். இப்பொழுது தமிழில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்பட்டதால் மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து இருக்கிறார்.

Also read: விருது வழங்கும் விழாவிற்கு வித்தியாசமாக வந்த ரெஜினா.. மெர்சலாக பார்த்த சினிமா பிரபலங்கள்.!

அஞ்சலி: இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், தூங்கா நகரம், கலகலப்பு போன்ற படங்களில் நடித்து ரசிகரின் மனதில் இடம் பிடித்தார். பின்பு சில சர்ச்சைகளில் சிக்கியதால் இவருடைய முழு கவனமும் மற்ற மொழி படத்திற்கு திரும்பி விட்டது. இப்பொழுது மிகப் பிரம்மாண்டமான ஹீரோ உடன் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஸ்ரேயா: இவர் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். 2001 இல் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். பின்பு தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து 2003 ஆம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மழை,திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி பாஸ், கந்தசாமி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்பு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் தற்பொழுது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருடன் ஜோடி போட மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

Also read: ஜோதிகாவுக்கே அக்கா போல மாறிய ஸ்ரேயா ஷர்மா.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய கொடுமை

Trending News