வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கனவுக்கன்னி வாய்ப்பை நழுவ விட்ட 5 நடிகைகள்.. எக்ஸ்பிரஸ் குயின்னாக வந்த நஸ்ரியா

பொதுவாக சில நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமாகி விடுவார்கள். அதே சமயம் அவர்கள் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருப்பார்கள். இவர்கள் கனவுக்கன்னி யாக வருவார்கள் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள். அப்படி கனவுக்கன்னி வாய்ப்பை நழுவ விட்ட நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

அசின்: இவர் விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர். பிறகு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் போது இந்தி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அங்கே நடிக்கப் போய்விட்டார். மறுபடியும் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்க மாட்டாங்களா என்று நினைக்கும் போது விஜய் கூட காவலன் படத்தில் நடித்தார். பிறகு பாலிவுட்டுக்கு சென்று முன்னணியாக நடிகையாக இருக்கும் போது ஒரு மொபைல் கம்பெனி ஓனரை திருமணம் செய்து கொண்டு அங்கே செட்டில் ஆகிவிட்டார். இவர் இங்கே இருந்திருந்தால் இப்பொழுது முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகள் இருக்கும் இடம் தெரியாமல் போயிருந்திருப்பார்கள்.

Also read: ரஜினி குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தில் நடித்த 5 படங்கள்.. 90களில் வானவராயனாய் பல பெண்களைக் கவர்ந்த தலைவர்

ஜெனிலியா: இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என்று பிசியாக நடித்து வந்தார். இவருடைய துருதுரு நடிப்பும், துள்ளலான பேச்சுக்கும் இன்றும் இவருடைய வருகைக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் தொடர்ந்து நடிப்பில் முழு ஆர்வத்தையும் காட்டி இருந்தால் கனவு கன்னியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பார். ஆனால் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே பாலிவுட் நடிகர் ரித்திஸை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ஷாலினி: இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். பின்பு காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றி படங்களாக மாறி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். இதற்கிடையில் அமர்க்களம் படத்தில் நடித்ததின் மூலம் அஜித்துடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அதனால் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

Also read: திருமணத்திற்கு பின் நடிப்பை உதறி தள்ளிய 6 நடிகைகள்.. உங்க சவகாசம் வேண்டாம் என கமுக்கமாக இருக்கும் ஷாலினி

மீரா ஜாஸ்மின்: இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழில் ரன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், ஆயுத எழுத்து, சண்டக்கோழி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். தொடர்ந்து 50 படங்களுக்கு மேல் நடித்த இவர் ஒரு கனவு கன்னியாக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் தொழிலதிபர் மெண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நஸ்ரியா: இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு தமிழில் ராஜா ராணி, நையாண்டி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அத்துடன் எக்ஸ்பிரஸ் குயின் என்று சொல்லும் அளவிற்கு இவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்த்து ரசிக்கும் படியாக இருக்கும். தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் மிகச்சிறு வயதிலேயே மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் மறுபடியும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதே சமயம் தமிழுக்கும் வந்து நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: நஸ்ரியாவை உப்பு மூட்டை தூக்கிய கணவரின் வீடியோ.. 7வது வருட திருமண நாளுக்கு குவியும் பாராட்டு.!

Trending News