திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிரபு காதலித்து கைவிட்ட 5 நடிகைகள்.. கண்ணழகி மடியில் கவிழ்ந்து கிடந்த சின்ன தம்பி

பிரபு 80, 90களில் காதல் மற்றும் ஆக்சன் திரைப்படங்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவர் நடித்த படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படியாக தான் இருக்கும். இவர் 215 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் காலத்தில் இவருடன் நடித்த சில நடிகைகளுடன் காதல் வசம் பட்டிருக்கிறார். ஆனால் அந்தக் காதல் கை கூடாமல் வெறும் ஆசையாகவே முடிந்து விட்டது. அந்த நடிகைகள் யார் என்று பார்க்கலாம்.

குஷ்பூ: இவர் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தமிழில் தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், சின்னத்தம்பி, மன்னன், சிங்காரவேலன், நாட்டாமை, கருப்பு நிலா, போன்ற தொடர்ந்து படங்களில் நடித்து மிகப்பெரிய பிரபலமான நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அத்துடன் இவர் நடிக்கும் காலத்தில் பிரபு கூட இணைந்து பத்து படங்களுக்கும் மேல் ஜோடியாக நடித்து பெஸ்ட் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் இருந்தார்கள். அதனால் பிரபுவும் இவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் சில பிரச்சினைகளால் இவர்களின் காதல் கைகூடாமல் போய்விட்டது.

Also read: மீண்டும் சின்னத்தம்பி-2க்கு தயாராகும் குஷ்பு, பிரபு.! உடல் எடையை குறைத்து வைரலாகும் புகைப்படம்

ஸ்ரீபிரியா: இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலில் தமிழில் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு பட்டிக்காட்டு ராஜா, ஆட்டுக்கார அலமேலு, ஆடுபுலி ஆட்டம், பில்லா, பொல்லாதவன், சிகப்பு மலர்கள் போன்று தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். பிறகு இவர் பிரபுவுக்கு ஜோடியாக சங்கிலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபுவுக்கு இவர் மேல் ஒரு ஆசை ஏற்பட்டிருக்கிறது. பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக இவர்களுடைய காதல் பிரிந்து விட்டது.

அம்பிகா: இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கை தொடங்கி பின்னர் 200க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். பிறகு அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தில் நடிகையாக தமிழில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கமல், ரஜினி,சத்யராஜ், மம்முட்டி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் பிரபுவுக்கு ஜோடியாக ஏழு படங்களுக்கு மேல் நடித்து அவருக்கு ஒரு பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார். மேலும் இவர் மீது பிரபுவுக்கு லவ் வந்துவிட்டது. ஆனால் அது கல்யாணம் வரை போகாமல் பாதியிலே முடிந்து விட்டது. காரணம் இவர் பிரபுவின் அப்பாவுக்கும் ஜோடியாக நடித்ததால் இவர்கள் காதல், கல்யாணம் வரை போகாமல் நின்று விட்டது.

Also read: பிரபு பட இயக்குனர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

ரேவதி: இவர் ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். அன்றைய காலகட்டத்தில் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமான முன்னணி நடிகை. இவர் தமிழில் மண்வாசனை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கன்னி ராசி, உத்தம புருஷன், கிழக்கு வாசல், தெய்வவாக்கு, தேவர் மகன் போன்ற வெற்றி படங்களின் நடித்து இருக்கிறார். இவர் பிரபுக்கு ஜோடியாக ஆறு படங்களுக்கு மேல் நடித்து ஒரு வெற்றி ஜோடி என்ற பட்டத்தை இவர்கள் பெற்று இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இவர்கள் நடிக்கும் போது இவர்களுடைய புரிதல் நன்றாகவே இருந்ததால் பிரபுக்கு இவர் மீது ஒரு காதல் ஏற்பட்டு இருக்கிறது.

கனகா: இவர் பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். இவர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தங்கமான ராசா, அதிசய பிறவி, கும்பக்கரை தங்கையா, சாமுண்டி படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் பிரபுக்கு ஜோடியாக நான்கு படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய கண்ணழகில் கவர்ந்து விட்டார் பிரபு. பிறகு இவர் மடியை சொர்க்கம் என்று இருந்தார்.

Also read: 20 வருடங்கள் வில்லனாக நடித்த சின்னத்தம்பி நடிகர்.. கேடு கெட்ட பழக்கத்தால் நடிகர் சங்க வாசலில் செத்துமடிந்த அவலம்

Trending News