ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மனைவி பேச்சு மந்திரம் என வாழும் 5 கணவன்மார்கள்.. நயன்தாரா பேச்சை தட்டாத விக்னேஷ் சிவன்

பொதுவாக மனைவி பேச்சை கேட்பதில் தப்பில்லை. நல்லதை யார் சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் மனைவி நல்லதே சொன்னாலும் பொண்டாட்டி பேச்சை கேட்கிறவன் என சொல்லுவார்கள். ஆனாலும் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் மனைவி பேச்சே மந்திரம் என்ற வாழும் ஐந்து கணவர்மார்களை பார்க்கலாம்.

குஷ்பூ, சுந்தர் சி : தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை. இவர் தன்னுடன் நிறை படங்களில் நடித்த பிரபுவுடன் கிசுகிசுக்கப்பட்டார். முறை மாமன் படத்தை இயக்கிய போது சுந்தர் சி மற்றும் குஷ்பூ இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சுந்தர் சி குஷ்புவின் பேச்சை தட்டாமல் கேட்பாராம்.

Also Read: விஷாலை நம்பி வாங்கிய பெரிய ஆப்பு.. பாட்ஷா பாய் போல் சுந்தர் சி திருப்பி கொடுத்த தரமான அடி

சூர்யா, ஜோதிகா : சூர்யாவுக்கு அப்போது மார்க்கெட் இல்லை என்றாலும் ஜோதிகா உச்சத்தில் இருந்த போதே அவரை காதலித்து வந்தார். திருமணத்திற்கு சூர்யா குடும்பம் சம்மதித்த பிறகு தன்னுடைய படங்களுக்கு வாங்கின அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டு ஜோதிகா சூர்யாவை மணந்தார். எப்போதும் ஜோதிகாவின் விருப்பத்திற்கு தடை சொல்லாமல் அவரது ஆசையை நிறைவேற்றி வருகிறார் சூர்யா.

சினேகா, பிரசன்னா : சூர்யா, ஜோதிகா போல தான் சினேகாவும் உச்சத்தில் இருக்கும் போது பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இடையே நிறைய மனக்கசப்பு இருந்ததாக பிரசன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனாலும் சினேகா என்ன விஷயம் சொன்னாலும் அதை பக்குவமாய் புரிந்து கொண்டு பிரசன்னா நடந்து கொள்வாராம்.

Also Read: சூர்யாவுக்கு கரெக்டான ஜோடி அந்த நடிகை தான்.. ஜோதிகாவே வெளிப்படையாக சொன்ன விஷயம்

ராதிகா, சரத்குமார் : ராதிகாவுக்கு முதல் இரண்டு திருமணங்கள் சரியாக கைகூடாத நிலையில் சரத்குமாரை அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார். பொதுவாக ராதிகா படப்பிடிப்பு தளத்திலேயே அனைவரையும் அதட்டி உருட்டி வேலை வாங்கக் கூடியவர். அப்படி தான் சரத்குமாரும் சில நேரங்களில் ராதிகாவிடம் பேசவே பயப்படுவாராம்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் : லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்தார். இப்போது விக்னேஷ் சிவனின் கேரியரில் முன்னேற நயன்தாரா பக்கபலமாக இருந்து வருகிறார். அதுமட்டும்இன்றி நயன்தாரா என்ன சொல்கிறாரோ அதற்கு மறு பேச்சு பேசாமல் விக்னேஷ் சிவன் நடந்து கொள்வாராம்.

Also Read: 14 வருடத்திற்கு பின் மீண்டும் ஸ்விம்மிங் சூட்டில் நயன்தாரா?. ஒரு முடிவுடன் இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

Trending News