புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தமிழ் சினிமாக்கு கிடைத்த தரமான 5 கேரக்டர் ஆர்டிஸ்ட்கள்..பக்ஸ் இல்லாமல் படம் வருவதில்லை

முன்னணி கதாபாத்திரத்தில் சில நடிகர்கள் நடித்து மிகவும் பிரபலமாகி வருகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மறக்க முடியாத தரமான ஐந்து கேரக்டர் ஆர்டிஸ்ட்கள் இருக்கிறார்கள். அதிலும் பக்ஸ் இல்லாமல் இப்பொழுது சில படம் வருவதில்லை என்ற நிலைமைக்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றிருக்கிறது.

ஜி.எம்.சுந்தர்: இவர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் புன்னகை மன்னன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். பின்பு கமல் நடிப்பில் வெளிவந்த சத்தியா படத்தில் சுந்தர் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.அதன் பிறகு உருமத்திரம் என்ற குறும்படத்தில் நடித்து அதற்கு தயாரிப்பாளராகவும் ஆனார். அந்தப் படம் சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற படத்தில் திலகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இவரின் நடிப்பு வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்தார். மேலும் இவர் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் முத்தழகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பரிச்சயமானார்.

Also read: 80, 90களில் ரஜினி கமலுக்கு டஃப் கொடுத்த 6 ஹீரோக்கள்.. மறைந்தாலும் நம் மனதில் விட்டு நீங்காத இதயம் முரளி

லிசி ஆண்டனி: இவர் தமிழ் திரையுலகில் பெரும்பாலும் துணை நடிகையாக நடிக்கக் கூடியவர். இவர் தூங்கா நகரம் படத்தில் தாசில்தார் மனைவியாக நடித்திருப்பார். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தார். இதனை அடுத்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் க்கு அம்மாவாக நடித்து தமிழ் படங்களில் அடையாளம் காணக்கூடிய நடிகையாக மாறினார். இதை தொடர்ந்து சில படங்களில் கௌரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும் கடந்த ஆண்டு வெளிவந்த கட்டாகுஸ்தி திரைப்படத்தில் விஷ்ணுவர்தனின் அத்தையாக நடித்திருப்பார்.

மாரிமுத்து: இவர் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் திரைப்படத்தின் உதவி இயக்குனராக சினிமாவிற்குள் வந்தார். பின்பு மணிரத்தினம், வசந்த்,சீமான் மற்றும் எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட இவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்பு கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சில படங்களை இயக்கினார். பின்பு 2011 ஆம் ஆண்டு யுத்தம் செய் திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக அறிமுகமானார். தற்பொழுது இவர் எதிர்நீச்சல் என்ற நாடகத்தில் குணசேகரன் ஆக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யாரு நடித்தாலும் இந்த அளவிற்கு பொருத்தமாக இருக்காது என்ற அளவிற்கு எதார்த்தமாக நடித்து வருகிறார்.

Also read: ஆதிராவிற்கு குணசேகரன் வைத்த செக்.. கரிகாலனுக்கு அடித்த ஜாக்பாட்

பக்ஸ் என்ற பகவதி பெருமாள்: இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஏற்ற படத்தில் பெருமாள் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி, பிச்சைக்காரன், 96, சூப்பர் டீலக்ஸ், ஆதித்ய வர்மா, பேச்சுலர், துணிவு, ரன் பேபி ரன் போன்ற படங்களில் முக்கிய இடங்களில் நடித்து ரசிகர்களுக்கு ஒரு நடிகராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதிலும் இப்பொழுது சில படங்களில் இவர் இல்லாமல் வருவது இல்லை அந்த நிலைமைக்கு பக்ஸ் போய்விட்டார் என்றே சொல்லலாம்.

ராம்குமார்: இவர் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் போட்டியாளராக பங்கு பெற்று குறும்படம் மூலம் அதிகமாக கவனத்தை ஈர்த்தார். பின்பு 2014 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை. அடுத்து மீண்டும் 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் வைத்து ராட்சசன் என்ற படத்தை இரண்டாவதாக இயக்கினார். இவர் இயக்கிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி படமாக ஆனது.

Also read: கதை நல்லா இருந்தும் சிபிராஜிற்கு காலை வாரிவிட்ட 5 படங்கள்.. சரியான இயக்குனர் கிடைக்காமல் திண்டாடும் வாரிசு

Trending News