வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கார்த்திக்கிடம் சிக்கி சின்னாபின்னமான 5 இயக்குனர்கள்.. மொத்தமாய் பட்ட நாமம் போட்ட நவரச நாயகன்

நடிப்பின் நவரச நாயகன் என்று அதிகமான ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்ட நடிகர் தான் கார்த்திக். பொதுவாகவே இவர் படங்கள் காதல் நிறைந்த படமாக தான் இருக்கும். அதனாலேயே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர் படங்களில் நடிப்பதற்கு முன்னதாக அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு சரியாக படபிடிப்பிற்கு வராமல் ஊட்டிக்கு சென்று ஓய்வெடுத்து விடுவாராம். இதனாலையே இயக்குனர்களுக்கு பெரிய போராட்டமாகவே அமைந்து இவரிடம் சிக்கி சின்னா பின்னமாகி ஆகி இருக்கிறார்கள். அத்துடன் சில தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு மொத்தமாய் நாமமும் போட்டு இருக்கிறார்.

ராம நாராயணன்: இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக பல படங்களில் பணி புரிந்திருக்கிறார். இவர் சுமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து சின்னஞ்சிறுசுகள், கண்ணே ராதா, மனைவி சொல்லே மந்திரம் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். அத்துடன் இவர் கார்த்திக் நடித்த சில படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் இவர் இயக்குனராக இருந்த பொழுது கார்த்திக்கும் இவருக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் சரியாக சூட்டிங் வராமல் அந்த நேரத்தில் ஓய்வெடுப்பதற்காக ஊட்டிக்கு போய் விடுவாராம்.

Also read: ஒரே கதையில் நவரசநாயகன் நடித்த 2 படம்.. விருப்பமே இல்லாமல் நடித்து விருதுகளை வாங்கிய கார்த்திக்

tp கஜேந்திரன்: இவர் திரைப்பட இயக்குனர் மற்றும் சில படங்களில் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்திருக்கிறார். இவர் 15-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அதில் கார்த்திக் நடித்து வெளிவந்த பாண்டிய நாட்டு தங்கம் படத்தை இவர்தான் இயக்கி இருக்கிறார். இந்த படம் பெரிய அளவில் ஹிட் படமாக ஆனது. இதனால் அடுத்த படத்திலும் இவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்து இவரிடம் கேட்டபோது முதலில் அட்வான்ஸ் பணத்தை கொடுங்கள் அப்பொழுது தான் நான் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார். உடனே இயக்குனரும், தயாரிப்பாளரிடம் இருந்து அட்வான்ஸ் பணத்தை வாங்கி கொடுத்து இருக்கிறார். அதன் பின் இவரை நடிப்பதற்கு கூப்பிட்டால் வர முடியாது என்று அலட்சியமாக பதில் அளித்து இயக்குனரை கன்னாபின்னா என்று அலைய வைத்திருக்கிறார்.

பாரதி கண்ணன்: இவர் எட்டு படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார். அதிலும் பக்தி படங்களுக்கு இவர்தான் பெஸ்ட் என்று பெயரையும் வாங்கி இருக்கிறார். ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ பண்ணாரி அம்மன், கண்ணாத்தாள் போன்ற படங்களை எடுத்து ஒரு வெற்றி இயக்குனராக இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் கார்த்தி இடம் ஒரு தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். உடனே அந்த தயாரிப்பாளரிடம் 15 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு மொத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இவரிடம் போய் கேட்டதற்கு என்னிடம் கொடுத்தால் வராது என்று இண்டஸ்ட்ரிக்கே தெரியும் தெனாவட்டாக பதில் அளித்து இருக்கிறார்.

Also read: 40 வருட நவரச நாயகன்.. போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய கௌதம் கார்த்திக்!

ஆர்.வி.உதயகுமார்: இவர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். இவர் உரிமை கீதம், புதிய வானம், உறுதிமொழி, கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்காரவேலன், எஜமான், பொன்னுமணி போன்ற பல வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். பின்பு இவர் இயக்கத்தில் கார்த்திக் நடித்த நந்தவன தெரு என்ற படத்தில் இவர்களுக்குள் பணரீதியாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இயக்குனரை அலையவிட்டு இருக்கிறார்.

சுந்தர் சி: இவர் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். தமிழில் 34 படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார். அத்துடன் 17 படத்திற்கு கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் கார்த்திக் வைத்து உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். அத்துடன் இவர்கள் கூட்டணி வெற்றி கூட்டணி ஆகவும் இருந்திருக்கிறது. ஆனால் இவரையே சூட்டிங் நேரத்தில் ரொம்பவும் படாதபாடு படுத்தி எடுத்து இருக்கிறார். அதாவது படம் நடிப்பதற்கு முன்னாடியே பணத்தை வாங்கிக் கொண்டு இவர் இஷ்டப்பட்ட தேதியில் வந்து நடித்துக் கொடுத்துட்டு போவாராம்.

Also read: திருமணத்திற்கு தேதி குறித்த ஜோடி.. காதலியை கரம் பிடிக்க போகும் கௌதம் கார்த்திக்

Trending News