வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

ஹிந்தி தெரியாது போடா.. பாலிவுட்டை கலக்கி ஹிட் கொடுத்த 5 இயக்குனர்கள்

5 directors made a hit in Bollywood without knowing Hindi: ஹிந்திக்கு எல்லோரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஒரு கூட்டம் பல நூற்றாண்டுகளாகவே போராடிக் கொண்டிருக்கிறது. ஆனா இப்ப வரைக்கும் அவர்களது பருப்பு வேகல. இப்படிப்பட்ட சூழலில் ஹிந்தி தெரியாமலே ஐந்து தமிழ் இயக்குனர்கள் தரமான ஹிந்தி படங்களை எடுத்து பாலிவுட்டில் மாஸ் காட்டி இருக்கின்றனர்.

பாரதிராஜா: 70களில் இருந்து கிராமத்து மண்வாசம் வீசக்கூடிய படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜா,1980ல் ரெட் ரோஸ் என்ற ஹிந்தி படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கினார். அதன் பிறகு லவ்வர்ஸ், சாவேரே வலி காடி போன்ற படங்களையும் இயக்கினார். இவரும் ஹிந்தி கத்துக்க விரும்பாமல் ஆங்கிலத்தின் மூலம் ஹிந்தி நடிகர்களுக்கு தன்னுடைய கருத்துக்களை புரிய வைத்து படம் எடுத்தார். இப்ப வரைக்கும் இவர் ஹிந்தி பேச பிடிக்காமல் இருந்து வருகிறார்.

மணிரத்தினம்: ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு திரும்பத் திரும்ப பார்க்கக்கூடிய படங்களை இயக்கியும் தயாரித்துக் கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மணிரத்தினம். இவருடைய படங்களில் வசனங்கள் எல்லாம் சாட் அண்டு ஸ்வீட்டாக இருப்பதோடு, காதலிக்காக ஒவ்வொரு படத்திலும் தனி இலக்கணத்தை வகுக்கிறார். அப்படிப்பட்ட மணிரத்தினம் தமிழில் இயக்கிய ரோஜா, பம்பாய், அஞ்சலி, தளபதி, குரு போன்ற படங்களை எல்லாம் ஹிந்தியிலும் எடுத்தார். இவருடைய உயிரே என்ற படம் ஹிந்தியில் ‘தில் சே’ என்ற டைட்டிலில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

அதேபோல் அலைபாயுதே படம் சாத்தியா என்ற டைட்டிலுடனும், ஆயுத எழுத்து திரைப்படம் யுவா என்ற டைட்டிலுடனும், ராவணன் படம் ராவண் என்றும், ஓ காதல் கண்மணி திரைப்படம் ஓக்கே ஜானு என்றும் ஹிந்தியில் வெளியானது. இவ்வளவு படங்களை பாலிவுட்டிற்கு கொடுத்த மணிரத்தினத்திற்கு ஹிந்தியே தெரியாது என்பது தான் ஆச்சரியம்.

Also read: அத்துமீறி நடித்த ஹீரோக்களை சகித்துக் கொண்ட 5 ஹீரோயின்கள்.. காஜல் அகர்வாலை கந்தலாக்கிய பகவந்த் கேசரி

ஹிந்தி தெரியாமலே பாலிவுட்டில் படம் எடுத்து ஹிட் கொடுத்த 5 இயக்குனர்கள்

ஷங்கர்: தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டம் காட்டக்கூடிய ஷங்கர், இதுவரை எடுத்த படங்களில் புதுப்புது டெக்னாலஜியை பயன்படுத்தி அசத்திக் கொண்டிருக்கிறார். இதனாலேயே ஷங்கரின் படத்தின் மீது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் ‘நாயக்: தி ரியல் ஹீரோ’ என்ற படத்தை அனில் கபூர், ராணி முகர்ஜி, சுஷ்மிதா சென் உள்ளிட்டோரை வைத்து இயக்கி பாலிவுட்டிலும் கால் பதித்தார். ஆனா இந்த படத்தை எடுக்கும் போது ஷங்கருக்கு ஹிந்தியே தெரியாது. இருந்தாலும் நாயக் படத்தை பாலிவுடே வியந்து பார்க்கும் அளவுக்கு சிறப்பாக எடுத்து, திறமை காண்பிப்பதற்கு மொழி அவசியம் கிடையாது என்பதை நிரூபித்தார்.

ஏஆர் முருகதாஸ்: பாக்குறதுக்கு சுள்ளான் மாதிரி இருந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தரமான படங்களை கொடுத்து வியக்க வைப்பவர் தான் ஏஆர் முருகதாஸ். இவர் கேப்டனுக்கு முக்கிய படமாக அமைந்த ரமணா படத்தை தமிழில் இயக்கியது மட்டுமல்லாமல் ஹிந்தியில் கேப்பர் என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார். அந்தப் படம் மட்டுமல்ல அவர் இயக்கிய கஜினி, அதன் பின் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் ஹாலிடே என்று டைட்டில் மறுபக்கம் செய்தார். இத்தனை ஹிந்தி படங்களை எடுத்தாலும் ஏஆர் முருகதாஸ் இப்ப வர ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்பவில்லை.

அட்லீ: தளபதியின் ஆஸ்தான இயக்குனராக பார்க்கப்பட்ட அட்லீக்கு இப்போது பாலிவுட்டில் மவுசு கூடி போயிருச்சு. ‘என்ன வச்சு ஒரு படம் எடுங்கள்’ என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் எல்லாம் அட்லீயை விடாப்பிடியை துரத்துகின்றனர். ஷாருக்கான் வைத்து சமீபத்தில் இவர் இயக்கிய ஜவான் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பாலிவுட் படங்களை இயக்குவதில் தான் அட்லீ ஆர்வம் காட்டுகிறார்.

அதோடு விஜய்யை வைத்து தமிழில் இவர் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் ‘பேபி ஜான்’ என்ற டைட்டில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ்,வாமிகா கபி உள்ளிட்டோரை வைத்து தயாரிக்கிறார். இப்படி பாலிவுட்டை ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் அட்லீக்கு ஹிந்தி தெரியாது. ஹிந்தி கத்துக்கோங்கன்னு சொன்னா, ‘நான் தமிழ் பேசும் இந்தியன் டா! ஹிந்தி தெரியாது போடான்னு!’ அசால்ட்டு காட்டுகிறார்.

Also read: வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து விஜய் தோற்ற 5 படங்கள்.. பெரிய அடி கொடுத்த வில்லு படம்

- Advertisement -spot_img

Trending News