திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யுடன் நடித்து பாலிவுட்டில் புகழ்பெற்ற 5 ஹீரோயின்கள்.. தளபதிக்கு இப்படி ஒரு ராசியா

விஜய்யுடன் சில படங்களில் நடித்து மிகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 5 முன்னணி ஹீரோயின்கள். பின்பு பாலிவுட்டில் சென்று நடிக்க சென்று விட்டார். தளபதி கூட நடித்த நடிகைகளுக்கு இப்படி ஒரு ராசியா என்று ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு ஹிந்தி படங்களில் கலக்கி வருகிறார்கள்.

பிரியங்கா சோப்ரா: இயக்குனர் மஜீத் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு தமிழன் திரைப்படம் விஜய் நடிப்பில் வெளிவந்தது. இப்படத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா சினிமாவில் அறிமுகமானார். இவர்களுடன் ரேவதி, நாசர் மற்றும் விவேக் நடித்தார்கள். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இதில் பிரியங்கா சோப்ரா, விஜய்யின் காதலியாக நடித்திருப்பார். இப்படத்தில் இவர்கள் பலூன் வைத்து செய்த அலப்பறைக்கு அளவே கிடையாது. 90ஸ் காலத்தில் காதலித்தவர்கள் கூட முயற்சி செய்து இருக்கிறார்கள். இதுதான் இவர் தமிழ் படத்தில் நடித்த முதல் மற்றும் கடைசி படமானது. பின்பு இவர் ஹிந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாகிவிட்டார்.

Also read:  விஜய் செய்ததை வாழ்க்கையில் மறக்க முடியாது.. ஓப்பனாக சொன்ன பிரியங்கா சோப்ரா

இஷா கோப்பிகர்: எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு நெஞ்சினிலே திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய், இஷா கோப்பிகர், நிழல்கள் ரவி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின்பு தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் அந்தப் படங்களில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இவர் கவனம் பாலிவுட்டில் திரும்பி விட்டது.

அசின்: இவர் சிவகாசி, காவலன், போக்கிரி போன்ற மூன்று படங்களில் விஜய்யுடன் ஜோடியாக நடித்து தமிழில் முன்னணி நடிகை என்ற முத்திரையை பெற்றவர். அதே மாதிரி இவர் நடித்த அனைத்து படங்களிலும் பெரிய அளவில் வெற்றியை பார்த்தவர். பின்பு தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்ததுடன் பாலிவுட்டில் நடிக்க சென்று விட்டார். அதன்பின்னர் அங்கே செட்டில் ஆகிவிட்டார்.

Also read: அசின், அனுஷ்காவை செஞ்சு விட்ட ஹரி.. ரகசியத்தை போட்டு உடைத்த பிரியா பவானி சங்கர்

ஸ்ரேயா: இயக்குனர் பரதன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு அழகிய தமிழ் மகன் என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஆகிவிட்டார். பின்பு இந்தி படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி பாலிவுட்டிற்கு சென்றுவிட்டார்.

ஜெனிலியா: இவர் விஜய் உடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சச்சின் திரைப்படத்தில் ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் காலேஜ் குயின் ஆக நடித்திருப்பார். இந்த படத்தில் இவரை மனிஷா கொய்ராலா வைத்து கிண்டல் செய்த அந்த காட்சிகள் மிகவும் ரசிக்க வைத்தது. அடுத்ததாக வேலாயுதம் திரைப்படத்தில் ஒரு சீரியசான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பின்னர் ஹிந்தி படங்களில் நடிக்க போய்விட்டார்.

Also read: உங்களுக்கு வயசே ஆகாதா.. யாரை சொல்கிறார் ஜெனிலியா

Trending News