
Mamitha Baiju : கடந்த வருடம் தெலுங்கில் வெளியான பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானார் மமீதா பைஜு. இதன் மூலம் இப்போது தமிழ் சினிமாவில் இவருக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் ஹெச் வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மமீதா நடிக்கிறார். மிகக் குறுகிய காலத்திலேயே விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
அடுத்ததாக ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் இரட்டை வானம் படத்தில் கதாநாயகியாக மமீதா பைஜு நடிக்கிறார். விஷ்ணு விஷாலுக்கு திருப்பு முனையை இந்த படம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மமீதா பைஜு கைவசம் இருக்கும் ஐந்து படங்கள்
லவ் டுடே, டிராகன் படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் lik படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் மமீதா பைஜு உடன் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மமீதா கமிட் ஆகியுள்ளார். வாடி வாசலுக்கு பிறகு இந்த படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் இப்போது இட்லி கடை படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மமீதா பைஜு தேர்வாகியுள்ளார்.
இது தவிர தெலுங்கில் பிரேமலு 2 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு ஒரு பிசியான நடிகையாக மமீதா பைஜு வலம் வருகிறார்.