வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Ajith : அஜித்தை வேறு பரிமாணத்தில் காட்டிய 6 படங்கள்.. மங்காத்தாவில் விளையாடிய விநாயக்

அஜித் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அந்த வகையில் அவருடைய சில படங்கள் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது. அஜித் தன்னை வேறு பருமாணத்தில் காட்டிய ஐந்து படங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

துணிவு

எச் வினோத்துடன் மூன்றாவது முறையாக அஜித் கூட்டணி போட்ட படம் தான் துணிவு. இந்தப் படத்தில் டார்க் டெவில், மைக்கேல் ஜாக்சன் என வில்லனுக்குள்ளான தோரணையில் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வசூலை பெற்றது.

மங்காத்தா

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் தான் மங்காத்தா. அஜித்தை வில்லனாக காட்டிய பெருமை வெங்கட் பிரபுவுக்கு கிடைத்தது. அதுவும் ஏசிபி விநாயக் மகாதேவ்வாக அஜித் பக்கவாக மங்காத்தா ஆட்டம் ஆடியிருந்தார்.

விசுவாசம்

சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் வெளியான படம் தான் விசுவாசம். ஒரு தந்தையாக உணர்வுபூர்வமான கதையில் அஜித் நடித்திருந்தார். அதுவும் சண்டைக்காட்சிகளில் தூக்கு துறையாக பின்னிப் பெடல் எடுத்திருப்பார். இந்தப் படம் எப்போதும் அஜித் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பெறும்.

பில்லா

அஜித்தின் கேரியரில் முக்கியமான படம் என்றால் பில்லா. படத்தில் ஸ்டைலிஷ் ஆன தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதுவும் தாதாவாக டேவிட் பில்லா கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பியிருந்தார். படத்தில் ஆக்சன் காட்சியும் மிரள செய்திருந்தார்.

வரலாறு

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் வரலாறு. அப்பா, இரண்டு மகன்கள் என தனது திறமையை இந்த படத்தில் அஜித் காட்டி இருந்தார். அதுவும் பெண்ணுக்கு உண்டான உடல் பாவனையை தன்னுள் கொண்டு அசத்தி இருந்தார்.

வாலி

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் உருவான படம் தான் வாலி. அஜித் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுவும் வில்லனாக காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தை அஜித் ஏற்று திறம்பட நடித்திருந்தார். எத்தனை தடவை பார்த்தாலும் இந்த படம் அழுத்து போகாது.

Trending News