திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹீரோ, ஹீரோயின் இருவருமே இரட்டை வேடங்களில் நடித்த 5 படங்கள்.. ஜோடியாக நடித்த பேரழகன் சூர்யா, ஜோதிகா

சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பாராட்டை வாங்குவது சினிமா பொருத்தவரை அவ்வளவு சுலபம் கிடையாது. ஆனாலும் சில நடிகர்கள், நடிகைகள் ஒரு படத்தில் இருவருமே சேர்ந்து இரட்டை வேடங்களில் நடித்து மிகவும் வெற்றியடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகர், நடிகைகளை பற்றியும் அந்த படங்களை பற்றியும் பார்க்கலாம்.

அடிமைப்பெண்: 1969 ஆம் ஆண்டு கே.சங்கர் இயக்கத்தில் அடிமைப்பெண் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, பண்டரி பாய், அசோகன், சோ மற்றும் சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தார்கள். இதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இரு வேடங்களில் நடித்தார்கள். இப்படத்தில் எம்ஜிஆர், மன்னர் வேங்கையன் மற்றும் இளவரசர் வேங்கையன் என்ற கதாபாத்திரத்திலும், ஜெயலலிதா ஜீவா மற்றும் பவளவல்லியாக இரண்டு கதாபாத்திரங்களிலும் இவர்கள் ஜோடியாக நடித்தார்கள். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. மற்றும் எம்ஜிஆர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

Also read: எம்ஜிஆருக்காக விட்டுக்கொடுத்த சிவாஜி.. மக்கள் திலகத்தின் வாழ்க்கையே மாற்றிய திரைப்படம்

கலையரசி: இயக்குனர் காசிலிங்கம் இயக்கத்தில் 1963ஆம் ஆண்டு அறிவியல் சார்ந்த நகைச்சுவையாக கலையரசி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் எம்ஜிஆர், பானுமதி, எம்.என் நம்பியார், பிஎஸ் வீரப்பா, ராஜஸ்ரீ மற்றும் சச்சு போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதில் எம்ஜிஆர் மற்றும் பானுமதி இரண்டு வேடங்களிலும் நடித்திருப்பார்கள். இப்படம் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருகை தரும் கருத்தை கொண்ட முதல் இந்திய திரைப்படமாக வெளிவந்தது.

இரண்டாம் உலகம்: செல்வராகவன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு ஒரு காதல் கற்பனை திரைப்படமாக இரண்டாம் உலகம் வெளிவந்தது. இப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா மற்றும் வெங்கடேஷ் ஹரிநாதன் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் இரண்டு வெவ்வேறு கிரகங்களில் ஏற்படும் நிகழ்வுகளை ஒரே நேரத்தில் வெளிவரும் இரண்டு கதைகளை பற்றி எடுக்கப்பட்டிருக்கும். இதில் அனுஷ்கா, ஆர்யா இரண்டு வேடத்தில் நடித்திருப்பார்கள்.

Also read: யாரிடமும் தலைவணங்காத அயன் லேடி ஜெயலலிதாவின் அறியாத சுவாரசியங்கள்.. முதல் சம்பளமும், தீராத சோபன் பாபு காதலும்

மந்திரப்புன்னகை: வி.தமிழழகன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு மந்திரப் புன்னகை திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், நதியா, ரகுவரன், தேங்காய் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரி மற்றும் மருத்துவராகவும், நதியா கீதா மற்றும் ஷீலா என்று இரண்டு கதாபாத்திரத்திலும் இவர்கள் இருவரும் நடித்திருக்கிறார்கள்.

பேரழகன்: சதி சங்கர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு பேரழகன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்தார்கள். இதில் சூர்யா, ஜோதிகா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தில் சிறந்த நடிகர், நடிகை மற்றும் நகைச்சுவை நடிகர் என்று சூர்யா, ஜோதிகா மற்றும் விவேக் அவர்களுக்கு விருதுகள் கிடைத்தது. இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Also read: 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஜோதிகாவின் திரைப்படங்கள்.

Trending News