புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குழந்தைத்தனமாக பிரபு கலக்கிய 5 படங்கள்.. சின்னத்தம்பி படத்தால் இளைய திலகத்துக்கு வந்த வெகுளி வாய்ப்பு

80, 90களில் பல பிளாக் பாஸ்டர் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் தான் இளைய திலகம் பிரபு. பொதுவாக இவர் படங்கள் காதல் மற்றும் ஆக்ஷன் திரைப்படங்கள் மூலமாக ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அத்துடன் சில படங்களில் வெகுளித்தனமான நடிப்பையும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

முத்து எங்கள் சொத்து: ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு முத்து எங்கள் சொத்து என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபு, ராதா, ராஜீவ் மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பிரபு வெகுளித்தனமான முகபாவனையுடன் அப்பாவிதனமான கேரக்டரில் நடித்திருப்பார். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

Also read; ஸ்ரீபிரியா காதல் வலையில் சிக்காமல் தப்பித்த 5 ஹீரோக்கள்.. மிரட்டி விட்டு காதலை பிரித்த சிவாஜி

ராஜா வீட்டு கண்ணுக்குட்டி: சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு ராஜா வீட்டு கன்னுக்குட்டி திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபு, விஜி, எஸ்வி சேகர், விகே ராமசாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பிரபு டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி ராஜா வீட்டு கண்ணு குட்டியாக துள்ளித் திரிவார். இப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார்.

சின்னத்தம்பி: பி வாசு இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு சின்னத்தம்பி திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபு, குஷ்பூ, ராதா ரவி மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பிரபு உலகமே அறியாத சின்ன குழந்தை போல் வெகுளித்தனமாக நடித்திருப்பார். இவர் மேலே ஆசைப்பட்டு குஷ்பு இவரிடம் தாலி வாங்கி கட்டிக் கொள்வார். இதனால் பிறகு ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக இப்படம் அமைந்திருக்கும்.

Also read; பிரபு காதலித்து கைவிட்ட 5 நடிகைகள்.. கண்ணழகி மடியில் கவிழ்ந்து கிடந்த சின்ன தம்பி

மனசுக்குள் மத்தாப்பு: ராபர்ட்-ராஜசேகர் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு மனசுக்குள் மத்தாப்பு திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபு, சரண்யா, சரத் பாபு மற்றும் செந்தாமரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பிரபு மனநல சரியில்லாத காப்பகத்தில் சேர்த்து விட்டு இருப்பார்கள். பிறகு இவரை பார்த்து சரண்யா சரி பண்ண முயற்சி செய்வார்.

அடுத்தாத்து ஆல்பர்ட்: ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு அடுத்தாத்து ஆல்பர்ட் திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபு, ஊர்வசி, மேஜர் சுந்தரராஜன் மற்றும் செந்தாமரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பிரபுவும் ஊர்வசியும் அவர்களின் கூடப் பிறந்தவர்களின் காதலுக்கு உதவி செய்வார்கள். ஆனால் வீட்டில் இருந்து எதிர்ப்பு வந்ததால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். பிறகு அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக பிரபுவும் ஊர்வசியும் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள்.

Also read; 80-களில் அதிக சம்பளம் வாங்கிய 5 டாப் ஹீரோக்கள்.. அப்ப புடிச்ச இடத்தை 20 வருஷமா போராடி தக்க வைக்கும் ரஜினி!

Trending News