Actor Vadivelu acted in character roles: தமிழ் சினிமாவில் காமெடியனாக ரவுண்டு கட்டிய வைகை புயல் வடிவேலு, நகைச்சுவை உணர்வை மட்டுமே தன்னுடைய நடிப்பில் வெளி காட்டாமல் குணச்சித்திர கேரக்டர்களிலும் ஐந்து படங்களில் பிச்சு உதறி இருக்கார். அதிலும் எமோஷனல நடிச்சு பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறார்.
பொற்காலம்: இந்தப் படத்துல வாய் பேச முடியாத தங்கச்சி ராஜேஸ்வரியை எப்படியாவது கல்யாணம் செஞ்சி கொடுக்கணும்னு முரளி நினைத்து, அதற்காக சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் அவருடைய குடிகார தந்தை மணிவண்ணன் எடுத்துக் குடித்து விடுவார். ஒரு கட்டத்துல தங்கச்சி ராஜேஸ்வரியின் திருமணம் நின்றுவிடுகிறது. நண்பனின் சோகத்தைப் பார்த்த வடிவேலு, வரதட்சணையே இல்லாமல் ராஜேஸ்வரியை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறார். இந்தப் படத்துல வடிவேலு நடித்த தங்கமணி என்ற கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது.
சங்கமம்: ரகுமான், விந்தியா நடித்த இந்த படத்துல ஹரிதாஸ் என்ற சப்போர்ட்டிவ் கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தார். நாட்டுப்புற நடனம் ஆடக்கூடிய ரகுமானுக்கு ஹார்மோனியம் வாசிக்கக் கூடிய வடிவேலு இந்த படத்தில் காமெடியிலும் பிச்சு உதறினார். அதோட இதுல காமெடியனாக மட்டுமல்லாமல் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரமாகவும் இவருடைய கேரக்டர் இருக்கும்.
Also Read: விஜயகாந்த் முதுகில் குத்திய வடிவேலு கலைஞர் 100 விழாவிற்கு என்டரி.. லைஃபை தொலைச்சிட்டியே பங்காளி
ராஜகாளியம்மன்: இந்த படத்துல கௌசல்யாவோட அண்ணனாக வடிவேலு நடித்தார். பக்தி படமான ராஜகாளியம்மன் படத்தில் நிழல்கள் ரவி வில்லன் ஆகி, அவ்வப்போது வடிவேலு உடம்பிற்குள் வருவதால் வடிவேலுவை இந்த படத்தில் வில்லனாக பார்க்க முடிந்தது. கடைசில கிளைமாக்ஸ் காட்சியில் கெட்டவர்களிடம் அடி வாங்கி ரத்தம் சொட்டச் சொட்ட காளியம்மன் முன்பு வடிவேலு நடித்த எமோஷனல் சீன் திரையரங்கில் ஆடியன்ஸை கண் கலங்கி அழ வைத்தது.
எம்டன் மகன்: தந்தை மகனின் பாசப் போராட்டமான இந்த படத்தில் கருப்பட்டி என்ற கேரக்டர்ல வடிவேலு நடித்தார். இதில் மருமகன் காதல் திருமணம் செய்ததற்கு அப்புறம் ஒரு தாய்மாமனாக, ஆதரவு இல்லாம இருந்த அவர்களுக்கு வடிவேலு பக்க பலமாய் இருந்து தன்னுடைய குடும்பத்தையே எதிர்த்து நின்றார். இந்த படத்துல ஒரு தாய் மாமனோட பவர் எவ்ளோ என்பதை வடிவேலு நடிச்சு காட்டினார்.
காமராசு: முரளி, லைலா நடிச்ச இந்த படத்துல வேலு என்ற கேரக்டர்ல வடிவேலு நடித்தார். இதுல கதாநாயகன் முரளியுடன் நெருங்கிய நண்பராக நடித்து தன்னுடைய டான்ஸ், பாட்டு என ஒட்டுமொத்த திறமையுமே இந்த படத்துல காட்டினார்.
Also Read: திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. ஏற்றி விட்ட ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு