வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அழகுனா அப்படி ஒரு அழகு என்று ரசித்த அஜித்தின் 5 படங்கள்.. பெண்களின் மனதை கொள்ளை அடித்த காதல் மன்னன்

அஜித் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் அவருடைய படங்கள் அனைத்துமே செம ஹிட் படங்களாக ஆகி வெற்றி பெற்று இருக்கிறது. அதிலும் அவருடைய அழகை பார்த்து ரசிப்பதற்காகவே அவருடைய படங்களை பார்ப்பவர்கள் அதிகம் உண்டு. முக்கியமாக 90ஸ் காலத்தில் இருந்த பெண்கள் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்த காதல் மன்னன் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இவருடைய படங்களை பற்றி பார்க்கலாம்.

காதல் கோட்டை: இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு காதல் கோட்டை திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், தேவயானி, ஹீரா மற்றும் ராஜா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் மற்றும் தேவயானி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் கடிதங்கள் மூலம் பேசிக்கொண்டு அதன்பின் அவர்களுக்கு உருவான காதல் கடைசியில் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருக்கிறார். இப்படம் சிறந்த தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றது. அத்துடன் 270 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா திரைப்படமாக மாறியது.

Also read: ஏகே 62 படத்தின் அப்டேட் வருமா வராதா?.. அஜித் எடுத்த விபரீத முடிவு

ஆசை: இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு ஆசை திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ் மற்றும் ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் மற்றும் சுவலட்சுமி அவர்களின் காதலை அழகாக வெளிப்படுத்தி காதலிக்கும் போது சுவலட்சுமிக்கு வரும் பிரச்சனையை அஜித் தெரிந்து கொண்டு அதிலிருந்து அவரை காப்பாற்றி ஒன்று சேர்வது தான் இப்படி கதையாகும். படத்திற்கு தேவா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் பாடல்கள் ஆனது. அத்துடன் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அமர்க்களம்: இயக்குனர் சரண் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு அமர்க்களம் திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், ஷாலினி, ரகுவரன் மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் வீணாக நேரத்தை கழித்துக் கொண்டு போக்கிரித்தனமான ஒரு இளைஞராக இருக்கும் பொழுது அவருக்கு ஷாலினி மீது ஏற்படும் காதலால் அவருடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதின் முக்கிய கதையாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் அஜித்தின் 25வது படமாகும். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெற்றது.

Also read: எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான அஜித் படம்.. இன்று வரை அடையாளமாய் மாறிப்போன கதை

ஆனந்த பூங்காற்றே: இயக்குனர் ராஜ்கபூர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு ஆனந்த பூங்காற்றே திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், மீனா, கார்த்திக், மாளவிகா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் நிச்சயம் செய்யும் பெண்ணிற்கு வந்த பிரச்சனையால் அவர் அப்பாவிடம் நியாயத்திற்காக போராடி சண்டை போட்டு தனியாக வாழ்வார். இதை பார்த்து அஜித் அவர் மனதை மாற்றி மீனாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் கதை தான் இப்படமாகும். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருக்கிறார். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வணிகரீதியாக வெற்றி பெற்றது.

காதல் மன்னன்: இயக்குனர் சரண் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு காதல் மன்னன் திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், மானு, எம் எஸ் விஸ்வநாதன், விவேக் மற்றும் கரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் தைரியமாக எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பெட் கட்டி ஜெயித்துக் காட்டும் இளைஞராக நடித்திருப்பார். பிறகு ஒரு சமயத்தில் நிச்சயதார்த்தம் ஆன ஹீரோயினை சந்திக்கும் போது அவர் மீது ஏற்பட்ட காதலை அவரிடம் சொல்லி அவரை எப்படி திருமணம் செய்து கொள்கிறார் என்பது தான் இப்படத்தின் கதையாகும். இப்படத்திற்கு பரத்வாஜ் மற்றும் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அஜித்துக்கு அமைந்தது.

Also read: அஜித்தை தூக்கி விட்டு அழகு பார்த்த 4 பிரபலங்கள்.. இவங்க இல்லனா AK எப்பவோ காணாம போயிருப்பார்

Trending News