செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இளசுகளை காதலிக்கும் படி செய்த மாதவனின் 5 படங்கள்.. புது ட்ரெண்டை உருவாக்கிய அலைபாயுதே

90ஸ் காலகட்டத்தில் காதலின் உணர்வை மிகவும் அழகாக மாதவன் கண்களின் மூலம் இளசுகளின் மனதை கொள்ளையடித்திருப்பார். அந்த காலத்தில் இவரின் படங்கள் அனைத்தும் காதலை அடிப்படையாகக் கொண்டு ரொமான்டிக் படங்களில் நடித்திருப்பார். அப்படி இவரின் காதல் படமான ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

மின்னலே: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு மின்னலே திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், அப்பாஸ், ரீமாசென் விவேக் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்தனர். இப்படத்தில் ரீமாசென் மழையில் நனைந்து துருதுருவென்று விளையாடுவதை மாதவன் பார்க்கிற அந்த ஒரு நொடியில் மாதவன் கண்களில் ஏற்படும் ஒருவிதமான ரொமான்டிக் ஆயிரம் வார்த்தைகளை பேசும். அந்த அளவிற்கு அவர் கண்களால் ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

Also read: 20 வருடத்திற்கு பின் ‘மின்னலே’ படத்தின் ரகசியத்தை போட்டுடைத்த கௌதம் மேனன்.. இவர் தான் வெற்றிக்கு முக்கிய காரணம்

டும் டும் டும்: அழகம்பெருமாள் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான டும் டும் டும் திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் மாதவன், ஜோதிகா, விவேக் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்தனர். இதில் மாதவன், ஜோதிகா இவர்களுக்குள் ஏற்பட்ட காதலை ரசிக்கும்படி நடித்து இருப்பார். இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத் திரும்ப பார்க்க தூண்டும் படமாக அமைந்திருக்கும். அதிலும் இந்த படத்தின் பெரிய ஹைலைட்டே இதில் வரும் “ரகசியமாய் ரகசியமாய் புன்னகை இட்டால்” இந்த பாடல் எல்லார் மனதிலும் ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது.

ரன்: என்.லிங்குசாமி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம் ரன். இப்படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், ரகுவரன் மற்றும் அனுஹாசன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார். இதில் மீரா ஜாஸ்மினை பார்த்த அந்த நொடியிலே மாதவன் காதலில் விழுகிறார். இந்த படத்தில் மாதவன் பார்வையாலேயே இளசுகளின் மனதை கொள்ளை அடித்து இருப்பார்.

Also read: சக்சஸ் கொடுக்காமலேயே பல கோடி சொத்து மதிப்பு.. மாதவனின் ரகசியத்தை வெளியிட்ட பயில்வான்

ஜே ஜே: சரண் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் மாதவன், அமோகா மற்றும் பூஜா நடித்திருப்பார்கள். இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் சேர்ந்து வருகிற சீன் 15 நிமிஷம் கூட இருக்காது. ஆனால் இந்தப் படம் முழுவதும் காதல் இருக்கும். இதில் “காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ” இந்த பாடல் காதலை தேடுபவர்களுக்கும், காதலியை தேடுபவர்களுக்கும் இது சமர்ப்பணமாக அமைந்திருக்கும்.

அலைபாயுதே: மணிரத்தினம் இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளிவந்த அலைபாயுதே திரைப்படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. இதில் மாதவன், ஷாலினி, ஸ்வர்ணமால்யா மற்றும் விவேக் ஆகியோர் நடித்திருப்பார்கள். இத் திரைப்படம் 90ஸ் காலகட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் மாதவன், ஷாலினிடம் காதலை சொல்லும் விதத்தை எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கத் தூண்டும். ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அழியாத ஒரு காவியமாக இத்திரைப்படம் மனதை வருடும் படமாக இருக்கும்.

Also read: அலைபாயுதே பார்ட் 2 என்ற நினைப்போ? மீனாக்ஷி சுந்தரேஸ்வர் விமர்சனம்

Trending News