திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

ரஜினிக்கே மறுவாழ்வு கொடுத்த இயக்குனர்.. மறக்கமுடியாத பி.வாசு-வின் 5 வெற்றி படங்கள்

இயக்குனர் பி.வாசு 80 காலகட்டத்திலிருந்து 2000 காலகட்டம் வரை பல திரைப்படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது திரைப்படங்களில் நடித்த ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்டோரும் அத்திரைப்படத்தின் மூலமாகவே அவர்களது மார்க்கெட் எகிறியது என சொல்லலாம். இதனிடையே தற்போது இயக்குனர் பி.வாசு ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக சந்திரமுகி2 திரைப்படத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்கி வருகிறார். இதனிடையே தற்போது பி.வாசுவின் இயக்கத்தில் ஹாட்ரிக் வெற்றிப்பெற்ற 5 திரைப்படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

நடிகன்: 1990ஆம் ஆண்டு நடிகர் சத்யராஜ், குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான நடிகன் திரைப்படம் 50 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. நடிகன் திரைப்படத்திற்கு சிறந்த வசனகர்த்தா என்ற தமிழ்நாடு ஸ்டேட் விருதை பி.வாசு பெற்றிருந்தார். இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் இத்திரைப்படத்தில் பிளஸ்ஸாக அமைந்தது.

Also Read : சந்திரமுகி படத்தில் கறாராக பேசிய வடிவேலு.. வழியின்றி ஒப்புக்கொண்ட பி.வாசு

மன்னன்: 1992ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த், குஷ்பூ, விஜயசாந்தி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மன்னன் திரைப்படம் ரஜினிகாந்த் கேரியரில் முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இடம்பெற்ற அம்மா என்றழைக்காத பாடலை பாடியதற்காக பாடகர் யேசுதாஸிருக்கு சிறந்த பாடகர் என்ற தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் கிடைத்தது. இப்படத்தில் விஜயசாந்தியின் தைரியமான நடிப்பு, ரஜினிகாந்தின் வசனங்கள் என பி.வாசு தெறிக்கவிட்டிருப்பார்.

வால்டர் வெற்றிவேல்: சத்யராஜ், சுகன்யா உள்ளிட்டோரின் நடிப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான வால்டர் வெற்றிவேல் திரைப்படம் சத்யராஜிற்கு பெயர் வாங்கிக்கொடுத்த திரைப்படம் எனலாம். வால்டர் வெற்றிவேல் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு பி.வாசு இப்படத்தின் கதையை மிகவும் ஆழமாக உருவாக்கியிருப்பார். 200 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிநடைபோட்ட திரைப்படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு.

Also Read : ரஜினியே வாடா போடா என அழைத்த நடிகர்.. டென்ஷனான பி.வாசு, சூப்பர் ஸ்டார் என்ன செய்தார் தெரியுமா.?

சேதுபதி ஐ.பி.எஸ்: கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான சேதுபதி ஐ.பி.எஸ் திரைப்படம் விஜயகாந்தின் கேரியரில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. 200 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடிய இத்திரைப்படத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படும் போலீசாக சேதுபதி ஐ.பி.எஸ் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். சென்டிமென்ட், காதல், சண்டை காட்சிகள் என ஒரு அதிரடி திரைப்படமாக இத்திரைப்படத்தை பி.வாசு இயக்கியிருப்பார்.

சந்திரமுகி: ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் இன்று வரை ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் 90ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான திரைப்படம் எனலாம். சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவிற்கு இத்திரைப்படத்தின் மூலமாக சிறந்த நடிகைக்கான கலைமாமணி விருதும் பெற்றார். பி.வாசு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படத்தின் பட்ஜெட் 19 கோடி ஆகும். ஆனால் இத்திரைப்படம் வெளியாகி 200 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடிய நிலையில் 70 கோடி வரை வசூலை படைத்தது.

Also Read : மீண்டும் சின்னத்தம்பி-2க்கு தயாராகும் குஷ்பு, பிரபு.! உடல் எடையை குறைத்து வைரலாகும் புகைப்படம்

- Advertisement -spot_img

Trending News