வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விக்ரம் உயிரைக் கொடுத்து நடித்து வெற்றி கண்ட 5 படங்கள்.. வேற லெவலில் உருவாகி இருக்கும் தங்கலான்

விக்ரம் எந்த பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பை மட்டுமே நம்பி சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். மேலும் உலக நாயகனுக்கு அடுத்தபடியாக நடிப்புக்காக எதையும் செய்யத் துணியும் நடிகன் என்றால் அது விக்ரம் தான். இந்நிலையில் தன்னையே வருத்திக்கொண்டு விக்ரம் நடித்த ஐந்து சிறந்த படங்களை பார்க்கலாம்.

சேது : விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுவது சேது. பாலா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் இரண்டாம் பாதியில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார். இந்த படத்திற்காக விக்ரம் பல சிரமம் பட்டாலும் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக சேது படம் அமைந்தது.

Also Read: சீயான் விக்ரமின் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்.. தங்கலான் கொடுக்கப் போகும் அப்டேட்

காசி : இந்த படத்தில் இசைக்கலைஞரான விக்ரம் பார்வையற்றவராக நடித்திருப்பார். இதற்காக பல மணி நேரம் கண்களை அப்படியே வைத்து சிரமப்பட்டிருந்தாராம். மேலும் அவரைப் பார்த்த பலர் இப்போதுதான் பார்வையற்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க முன்வந்துள்ளனர்.

பிதாமகன் : சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிதாமகன். இந்த படத்தில் விக்ரம் பிணங்களை எரிக்கும் வெட்டியான் வேலை பார்ப்பவராக நடித்திருப்பார். இதில் இவரது தோற்றமும் நடவடிக்கையும் பலருக்கும் வியப்பு அளிக்கும் விதமாக இருக்கும்.

Also Read: கமலுடன் துணிந்து மோதும் விக்ரம்.. பலத்தை நிரூபிக்க எடுத்த கடைசி ஆயுதம்

அந்நியன் : அம்பி, அந்நியன், ரெமோ என மூன்று வித்தியாசமான பரிமாணங்களில் விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த மூன்றிலும் சிறிதாக கூட ஒற்றுமை இல்லாத அளவுக்கு விக்ரம் வித்தியாசம் காட்டி இருப்பார். மேலும் விக்ரமின் கேரியரில் அந்நியன் படத்திற்கு முக்கிய இடம் உண்டு.

தங்கலான் : இப்போது பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் படம் தங்கலான். இப்படத்தில் அப்படியே காட்டுவாசியை பிரதிபலிக்கும் படியாக விக்ரம் நடித்திருக்கிறார். விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் கிளிம்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Also Read: பா ரஞ்சித் கொடுத்த தங்கலான் அப்டேட்.. சிங்கிளாக வசூல் வேட்டையாட வரும் விக்ரம்

Trending News