செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தனுஷ் கேரியரை க்ளோஸ் பண்ணும்படி அமைந்த 5 படங்கள்.. வளரும் போதே வந்த சோதனை

தனுஷ் இப்பொழுது ஒரு முன்னணி நடிகராக இருந்து வருகிறார். ஆனால் இவரின் ஆரம்ப காலத்தில் சில படங்களால் தோல்வியுற்று சினிமா கேரியரை க்ளோஸ் பண்ணும்படி அமைந்தது. அப்படி இவருக்கு தோல்வி அடைந்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

ட்ரீம்ஸ்: கஸ்தூரிராஜா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு “ட்ரீம்ஸ்” ஒரு காதல் திரைப்படமாக வெளிவந்தது. இதில் தனுஷ் மற்றும் தியா நடித்தனர். இதில் தனுஷ் ஒரு இளைஞனாய் கெட்டுப் போய் வழி தவறி வாழ்கிறார். இருப்பினும் அவர் காதலிக்க ஆரம்பித்த பிறகு தன்னை சிறப்பாக மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார் ஆனால் அந்த விஷயங்கள் மோசமாக மாறுகிறது. இந்த படம் விமர்சன ரீதியாக மோசமான விமர்சனங்களை பெற்றது. இது தனுஷ்க்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது.

Also read: தனுஷ் தூக்கிவிட்டு அழகு பார்த்த 6 பிரபலங்கள்.. நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்?

புதுக்கோட்டையிலிருந்து சரவணன்: இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ் மற்றும் புதுமுக நடிகை அபர்ணா பிள்ளை நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் கதை வாரியாக ஒன்றும் இல்லை மற்றும் சலிப்பூட்டும் படமாக அமைந்தது. இது விமர்சன ரீதியாக மோசமான விமர்சனங்களை பெற்று பெரிய அளவில் தோல்வியை கொடுத்தது.

அது ஒரு கனாக்காலம்: பாலு மகேந்திரா இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு அது ஒரு கனாக்காலம் என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், பிரியாமணி மற்றும் கருணாஸ் நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் பாடல்கள் ஹிட் ஆனதை தவிர இந்த படம் எதிர்பார்த்த அளவில் ஹிட் ஆகவில்லை. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது

Also read: தனுஷ் இனிமேல் அக்கட தேசத்தில் படம் வெளியிடுவது சந்தேகம்.. வாத்தி பட பிரமோஷனில் ஏற்பட்ட சர்ச்சையான பேச்சு

சுள்ளான்: இயக்குனர் ரமணா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு சுள்ளான் திரைப்படம் தனுஷ், சிந்து துலானி, மணிவண்ணன், பசுபதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இதில் தனுஷ், கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவனாக நடித்து நண்பர்களுடன் உல்லாசமாக இருந்து பின்பு சிந்து துலானியை காதலிக்கிறார். அதன் பிறகு குடும்பத்திற்கு வில்லனால் ஏற்படும் பிரச்சனையை சமாளித்து அவர்களை காப்பாற்றும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தப் படம் தனுஷின் வெற்றி படமாக அமையாமல் படுதோல்வி அடைந்தது.

பரட்டை என்கிற அழகுசுந்தரம்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு பரட்டை என்கிற அழகுசுந்தரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், மீரா ஜாஸ்மின், அர்ச்சனா, நாசர் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப் படம் தொலைந்து போன தன் மகனை தேடி கிராமத்திலிருந்து, நகரத்திற்கு வரும் ஒரு அம்மாவின் கதையை படமாக்கப்பட்டு இருக்கும்.  ஆனால் இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனதால் இது தனுஷ்க்கு வெற்றி படமாக அமையவில்லை.

Also read: 3-வது முறையாக இணையும் கூட்டணி.. அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட தனுஷ் பட இயக்குனர்

Trending News