வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் சேதுபதிக்கு காலை வாரிவிட்ட 5 படங்கள்.. 2 மணி நேரமா மண்டையை சொரிய வைத்த மக்கள் செல்வன்

பொதுவாகவே விஜய் சேதுபதி என்றாலே மாசத்துக்கு ஒரு படத்தை நடித்து வெளியிடுவது தான் இவருடைய வழக்கமான ஒன்று. அப்படி பார்த்தால் வருடத்திற்கு 10 படங்களுக்கு மேல் இவருடைய படங்கள் திரையரங்குகளில் வெளிவந்திருக்கிறது. ஆனால் வெளிவந்த அனைத்து படங்களும் வெற்றி பெறுமா என்று சொல்ல முடியாத நிலையில் இவர் நடித்த சில படங்கள் இவரை காலை வாரிவிட்ட அளவிற்கு அமைந்திருக்கிறது. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

DSP: பொன்ராம் இயக்கத்தில் கடந்த வருடம் DSP திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, அனுக்ரீத்தி வாஸ், ஷிவானி நாராயணன், பிரபாகர், புகழ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் விஜய் சேதுபதி நேர்மையான போலீஸ் ஆபீஸராக இருந்து ரவுடிகளை தட்டி கேட்கும் விதமாகவும் அதனால் ரவுடி கும்பல் இவருடைய தங்கை குடும்பத்தை பழிவாங்கி விடுவார். பிறகு விஜய் சேதுபதி அவர்களை தண்டிக்கும் விதமாக கதை அமைந்திருக்கும். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகவும் தோல்வியாக அமைந்தது.

Also read: தனுஷின் ரீல் அண்ணன் விஜய் சேதுபதிக்கு செய்த துரோகம்.. அரசன நம்பி புருஷனை கைவிட்ட கதை

றெக்க: ரத்தின சிவா இயக்கத்தில் றெக்க திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி,லட்சுமி மேனன் மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர் அறியாமல் செய்த தவறினால் காதல் பிரிந்து விடுவதை அடுத்து இளைஞராக ஆனபோது காதலுக்கு உதவி செய்யும் கேரக்டரில் நடித்திருப்பார். இதனால் இவருக்கு வரும் பிரச்சினைகளில் இருந்து எப்படி இவர் வெளியேறுகிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் விஜய் சேதுபதிக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தை கொடுக்கவில்லை.

ஜூங்கா: கோகுல் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ஜூங்கா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக அளவில் கடன் இருப்பதால் அதை அடைப்பதற்காக நாடு நாடாக சென்று ஒவ்வொரு வேலையை செய்து வரும் மூலமாக கதை நகரும். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் சராசரியான லாபத்தை பெற்றது.

Also read: 30 வயது வித்தியாசம், விஜய்க்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் மகள்.. இளசாக பிடிச்சுட்டு வந்த வெங்கட் பிரபு

துக்ளக் தர்பார்: பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு துக்ளக் தர்பார் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, ராசி கண்ணா, பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது ஏற்கனவே வெளிவந்த அமைதிப்படையின் கதை போலவும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் அந்தப் படத்தை போல ஹீரோவுக்கு தலையில் அடிபட்டு மெமரி லாஸ் ஆகுற மாதிரியும் கதையை நகர்த்திக் கொண்டு வந்திருப்பார்கள். இப்படம் ஆனால் இவருக்கு ரொம்பவே தோல்வி அடைந்தது.

அனபெல் சேதுபதி: தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு அன்னபெல் சேதுபதி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு, ஜெகபதி பாபு மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை வித்தியாசமாகவும், அதே நேரத்தில் த்ரில்லர் படமாக கொண்டு போக வேண்டும் என்று நினைத்து காமெடியாக தான் இப்படம் அமைந்திருக்கும். இப்படம் ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனத்தை பெற்று பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

Also read: மீண்டும் மீண்டும் மரண அடி வாங்கிய விஜய் சேதுபதி.. ஐஸ்வர்யா ராஜேஷிடம் அசிங்கப்பட்ட கொடுமை

Trending News