புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கதை நல்லா இருந்தும் சிபிராஜிற்கு காலை வாரிவிட்ட 5 படங்கள்.. சரியான இயக்குனர் கிடைக்காமல் திண்டாடும் வாரிசு

கோலிவுட்டில் வாரிசு நடிகர்களாக என்ட்ரி கொடுத்த விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் தங்களுக்கென்று தனி இடத்தை வகுத்திருக்கின்றனர். ஆனால் சத்யராஜின் மகன் சிபிராஜ், திறமை இருந்தும் முன்னணி நடிகராக வருவதற்கு படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவர் 20 படங்களுக்கு மேல் நடித்த போதிலும் அவரது பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு படம் கூட ஹிட் கொடுக்கவில்லை. இருப்பினும் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்த நடித்துக் கொண்டிருக்கும் சிபிராஜுக்கு, சரியான இயக்குனர் கிடைக்காமல் ஹிட் கொடுக்க வேண்டிய 5 படங்களும் பிளாட் ஆனது.

நாணயம்: 2010 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் சக்தி ரா. ராஜன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிபிராஜுடன், பிரசன்னா, ரம்யா ராஜ், எஸ்பி சுப்ரமணியம் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வங்கியில் வேலை பார்க்கும் ஊழியரை வைத்து எவ்வளவு சாதுரியமாக பணத்தை கொள்ளையடிக்கின்றனர் என்பது தான் இந்த படத்தின் கதை. இதன் கதை சுவாரசியம் மிகுந்ததாக இருந்தாலும், படத்தை இயக்குவதில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

Also Read: படமே ஓடாவிட்டாலும் சேட்டை மட்டும் குறைய மாட்டேங்குது.. அல்பத்தனமாய் நடந்து கொண்ட சிபிராஜ்

நாய்கள் ஜாக்கிரதை: 2014 ஆம் ஆண்டு நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அதிரடி திரில்லர் படமாக நாய்கள் ஜாக்கிரதை படத்தில் போலீஸ் கெட்டப்பில் சிபிராஜ் மிரட்டிவிட்டிருப்பார். இந்த படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கினார். இந்த படத்தில் எதிரிகளால் சிபிராஜின் மனைவி மண்ணுக்குள் புதைக்கப்படுவார். அதன்பின் சிபி வளர்க்கும் நாயின் உதவியுடன் அவரை மீட்டெடுப்பது தான் படத்தின் கதை. இந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும் படம் திரையரங்கில் ஓரளவு மட்டுமே ஓடியது.

சத்யா: 2017 ஆம் ஆண்டு பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் சிபிராஜ், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன் உள்ளிட்டூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் சத்யா. முன்னாள் காதலியின் கடத்தப்பட்ட மகளை கண்டுபிடிக்க களம் இறங்கி, தன் மகளுடன் சேரும் ஹீரோவின் கதை தான் சத்யா. இந்தப் படத்தின் கதை மிகச் சிறப்பாக இருக்கும் இருப்பினும் படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டது.

Also Read: மகனை கேரியரில் தூக்கிவிட தயாரிப்பாளராக மாறிய சத்யராஜ்.. சிபிராஜ்க்கு வாரி இறைத்த 3 படங்கள்

வால்டர்: 2020 ஆம் ஆண்டு குற்றவியல் சம்பந்தப்பட்ட அதிரடி திரில்லர் படமான இந்த படத்தில், சிபிராஜ், நடராஜ், சமுத்திரக்கனி, ரித்திகா, சனம் செட்டி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருப்பார்கள். வால்டர் இந்த படத்தில் ஏ எஸ் பி வால்டராக சிபிராஜ் செம கெத்தாக நடித்திருப்பார். நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், சமூகத்தில் பெரிய ஆளாக இருப்பவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் வால்டர் படத்தின் கதை. இந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும் இயக்குனர் யூ அன்பரசன், அதை சரியாக கையாள தவறியதால் படம் ஃபிளாப் ஆனது.

கபடதாரி: 2021 ஆம் ஆண்டு மர்மங்கள் நிறைந்த பரபரப்பூட்டும் திரைக்கதையாக வெளியான இந்தப் படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். படத்தில் சிபி ராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் இறந்து போன 3 பேரின் வழக்கை கையில் எடுத்த போலீஸ் அதிகாரி, அதற்குத் தேவையான தகவல்களை சேகரித்து, உண்மையை கண்டுபிடித்து பிறகு குற்றவாளிகளை கையும் களவுமாக எப்படி பிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. படத்தின் கதை பலரையும் மெய்சிலர்க்க வைத்தாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காமல் போனது.

Also Read: அருண் விஜய்க்கு பின் லக்கில்லாத நடிகர்.. அப்பாக்கள் பெரிய பிஸ்தாவாக இருந்தும் பயனில்லை

இவ்வாறு இந்த 5 படங்களும் சிபிராச்சுக்கு வெற்றியை பெற்று தராமல் காலை வாரிவிட்டது. இருப்பினும் இந்த படத்தின் கதை அல்டிமேட் ஆக இருக்கும். இருப்பினும் அதை சரியாக கையாள தெரியாத இயக்குனர்களின் கையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் வாரிசு நடிகர் சிபிராஜ், இப்போதும் தன்னுடைய முயற்சியை கைவிடாமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

Trending News