தமிழ் சினிமாவில் சில படங்களில் நடிகர்கள் பணக்காரங்களாக ஆக வேண்டும் என்று சொன்னதுமே அவர்களுக்கு ஒரே பாட்டு மட்டும் கொடுத்து வசதி வாய்ப்போடு இருக்கிற மாதிரி காட்டி இருப்பார்கள். இதைப் பார்த்த நாமளும் அறியாத வயதில் இந்த மாதிரி ஒரு பாட்டு இருந்தால் போதும் நம்மளும் பணக்காரர்கள் ஆகிவிடலாம் என்று யோசிக்க வைத்திருக்கும். அப்படிப்பட்ட படங்கள் மற்றும் பாடல்களை பார்க்கலாம்.
படையப்பா: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு படையப்பா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், ரஜினி, ரம்யா கிருஷ்ணா, சௌந்தர்யா, சித்தாரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது பணத்தின் மேல் இருந்த ஆசையால் ரஜினி குடும்பத்தை ஏமாற்றி சொத்தை அபகரிப்பதை கதையாக எடுக்கப்பட்டிருக்கும். இதிலிருந்து ரஜினி மறுபடியும் எப்படி பணக்காரராக ஆகிறார் என்பதை காட்டி இருக்கும். அதிலும் “வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா” இந்த ஒரு பாட்டின் மூலம் அவர் பணக்காரர் ஆனது மட்டுமல்லாமல் நம்மளையும் ஊக்கப்படுத்திய பாடல் என்றே சொல்லலாம்.
Also read: அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த ரஜினியின் 6 படங்கள்.. இத்தனை நாட்களா என வாயை பிளக்க வைத்த சந்திரமுகி
சூரியவம்சம்: விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு சூரியவம்சம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், தேவயானி, ராதிகா, பிரியா ராமன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தின் கதை ஆனது அவமானப்பட்ட அவர்களின் முன்னாடி பெரிய அளவில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை கதையாக எடுக்கப்பட்டிருக்கும். அதற்காக படித்து பணக்காரராக வேண்டுமென்று நினைத்து ஒரே பாட்டின் மூலம் ஒருவர் கலெக்டராகவும் மற்றொருவர் பெரிய தொழிலதிபராகவும் மாறி இருப்பார்கள். இதை பார்க்கும் பொழுது நமக்கும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்க வைத்திருக்கும். அப்படி யோசிக்க வைத்த பாடல் ” நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்”.
தமிழ்ப் படம்: சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு தமிழ் படம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவா, திஷா பாண்டே, எம் எஸ் பாஸ்கர் மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்தது. இதில் ஒரே பாட்டு மூலம் வசதி வாய்ப்போடு ஆகிவிடலாம் என்று காட்டி இருப்பார்கள். அப்படி வந்த பாட்டு தான்” ஒரு சூறாவளி கிளம்பியதே சில தாண்டவம் தொடங்கியதே சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்”.
புன்னகை தேசம்: கே. ஷாஜகான் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு புன்னகை தேசம் திரைப்படம் வெளிவந்தது. இதில் தருண், சினேகா, குணால் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் நண்பர்களாக இருந்து வேலை தேடும் போது ரொம்பவும் கஷ்டப்பட்டு வறுமையில் வாடுபவர்களை ஒரே பாட்டின் மூலம் பெரிய அளவில் வளர்ந்து பணக்காரர்களாக ஆகிவிட்டார்கள் என்பது போல் காட்டி இருப்பார்கள். அந்தப் பாடல் தான்” சங்கீதம் தான் சாப்பாடு ஆச்சு, எல்லாம் தேவன் ஏற்பாடு ஆச்சு, ஒரு நாள் நான் பாடாவிட்டால் மூச்சை அடிக்கும்”.
அண்ணாமலை: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு அண்ணாமலை திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, குஷ்பு, சரத் பாபு, ரேகா மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் சிறு வயதிலிருந்து நண்பர்களாக இருக்கும் ஏழை பால் வியாபாரி அண்ணாமலை மற்றும் பணக்கார ஹோட்டல் ஓனராக இருக்கும் அசோக் இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டதால் ஏழையாக இருக்கும் ரஜினி உன்னைவிட நான் பணக்காரனாக மாறுகிறேன் என்று சபதம் போட்டிருப்பார். அப்பொழுது வரும் ஒரு பாடல் மூலமே பெரிய பணக்காரராக ஆகி விடுவார். அப்பொழுது பார்த்த 90ஸ் கிட்ஸும் இந்த மாதிரி ஒரு பாட்டு இருந்தால் போதும் நம்மளும் பணக்காரராக ஆகிவிடலாம் என்று ஆழமாக மனதில் பதிய வைத்தது. அந்த அளவுக்கு ஊக்கப்படுத்திய பாடல் என்றால் “இன்று கண்ட அவமானம் வென்று
தரும் வெகுமானம் வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்”.
Also read: சொன்ன வார்த்தையை காப்பாற்றிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் என நிரூபித்த தருணம்