புதன்கிழமை, ஜனவரி 15, 2025

2024 இல் ஐந்து படங்களை ரிலீஸ் செய்யும் ஜிவி பிரகாஷ்.. பாரதிராஜா உடன் கூட்டணி போட்ட கள்வன்

GV Prakash : ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்த நிலையில் இப்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் 2024 இல் எப்படியாவது மிகப்பெரிய ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்று ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் போன்றோர் தான் வருசத்திற்கு 5,6 படங்களை வெளியிட்டு வந்தனர். இப்போது அவர்கள் வரிசையில் ஜிவி பிரகாஷ் இணைந்து இருக்கிறார். அவருடைய நடிப்பில் என்னென்ன படங்கள் இந்த வருடம் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜிவி பிரகாஷின் ரெபல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிவி பிரகாஷ், மமீதா பைஜு நடிப்பில் ரெபல் படம் வெளியாகி இருந்தது. கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பாரதிராஜா உடன் இணைந்து கள்வன்

பிவி சங்கரின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் கள்வன். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இவானா போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். கள்வன் படம் வருகின்ற ஏப்ரல் நான்காம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் முதல் முறையாக ஜோடி போடும் ஜிவி பிரகாஷ்

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் டியர். இந்தப் படத்தில் முதல் முறையாக ஜிவி பிரகாஷ் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணி போட்டிருக்கிறார். டியர் படம் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ஜிவி பிரகாஷின் இடி முழக்கம்

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வருகிறது இடிமுழக்கம். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் காயத்ரி இணைந்து நடித்துள்ளார். கிராமத்து கதை அம்சம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் 2018 நாளில் வெளியாக இருக்கிறது.

கமல் தொடங்கி வைத்த கிங்ஸ்டன்

ஜிவி பிரகாஷின் 25 ஆவது படத்தை உலக நாயகன் கமலஹாசன் துவக்கி வைத்தார். கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருக்கிறார். அதோடு இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Trending News