வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

90களில் பயமுறுத்திய 5 பேய் படங்கள்.. அப்பமே 2 படங்களில் பட்டைய கிளப்பிய தக்காளி சீனிவாசன்

Five Ghostly films : தமிழ் படங்கள் வரிசையில் காதல், ஆக்ஷ்ன், காமெடி, சென்டிமென்ட் போன்ற படங்களுக்கு மத்தியில் ஒரு 5 வருட காலத்துக்குள் திகில் படங்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. படங்கள் மக்களை பயமுறுத்த மட்டும் செய்யாமல் மக்களை, இப்படியும் படம் எடுப்பார்களா என்று விரல் வைத்து யோசிக்கும் அளவிற்கு திகில் நிறைந்த படங்களாகவும் அமைந்திருந்தது. அவ்வாறு பட்டையை கிளப்பிய 5 படங்கள்.

மை டியர் லிசா : 1987 ஆம் ஆண்டு நிழல்கள் ரவி சாதனா, மனோரமா நடித்து வெளிவந்த திரைப்படம் மை டியர் லிசா. திகில் திரைப்படங்களின் முன்னோடியாக கருதப்படும் இது மலையாள டப்பிங் படமாகமாகும். மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்த இப்படம் அந்த சமயத்தில் திகில் நிறைந்த காட்சிகளால் கொலை நடங்க செய்தது. நிழல்கள் ரவியின் மனைவி உடம்பில் பேய் புகுந்து தன்னை கொன்றவரை பழி தீர்க்கும் கதை தான் என்றாலும் அச்சமயத்தில் பிரமிக்க வைத்தது.

Also Read : சுந்தர் சி இயக்கத்தில் பிளாக் பாஸ்டரான 6 படங்கள்.. பேய்களை டம்மி பீஸ் ஆக்கிய அரண்மனை

ஜென்ம நட்சத்திரம் : தக்காளி சீனிவாசன் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சதில் வெளிவந்த திகில் படம் ஜென்ம நட்சத்திரம். நாசர், விவேக், ப்ரமோத், சிந்துஜா நடித்திருந்தனர். இப்படத்தில் குழந்தையின் பிறப்பு ரகசியத்தை தெரிந்து கொண்ட கதாநாயகன் அதை நம்பி ஏற்று தன்னையும் தன் குடும்பத்தையும் பிறப்பு ரகசியம் சொன்ன பாதிரியாரையும் காப்பதற்குள் அனைவரையும் கொன்று விடுகிறது அந்தக் குழந்தை. சாத்தானின் குழந்தை அனைவரையும் அழித்துவிட்டு வேறொரு புதிய உறவுகளிடத்தில் செல்கிறது. சாத்தானின் வேலை தொடர்கிறது என்ற படத்தை முடித்து இருப்பார்கள். அந்த சமயத்தில் இப்படத்தை வேற லெவலில் தக்காளி சினிவாசன் அதிர வைத்திருப்பார்.

அதிசய மனிதன் : தக்காளி சீனிவாசனின் தயாரிப்பில் அவர் நடித்து பிரபாகர் இயக்கிய திகில் திரைப்படம் அதிசய மனிதன். இது நாளைய மனிதன் படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. ஆராய்ச்சியிலுள்ள மருத்துவர் ஒருவர் உருவாக்கிய அளிக்க முடியாத மனிதன் ஒருவன் எப்படி மிருக வெறியில் வரிசையாக ஒவ்வொருவரையும் கொல்கிறான் என்பதே கதை. திகில் திருப்பங்கள் எதிர்நோக்கும் நொடியில் நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும் அளவிற்கு பேய் மனிதனின் உருவமும் அவன் கொலை செய்யும் விதமும் அமைந்திருக்கும். இறுதியாக சிறப்பு போலீஸ் அதிகாரியாக வரும் நிழல்கள் ரவி ஒரு லேசர் துப்பாக்கியால் அவனை அழித்து விடுவார்.

Also Read : அடுத்த நாசர் என்று பெயர் எடுத்த நடிகர்.. 5 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் ரஜினியின் நண்பர்

யார் : இயக்குனர் சக்தி கண்ணன் இயக்கி அர்ஜுன், நளினி, ஜெய்சங்கர் நடித்த திரைப்படம் யார். அமானுஷ்ய நேரத்தில் அமானுஷ்யமாய் ஒரு குழந்தை பிறக்கிறது. அது ஜெய்சங்கர் வீட்டில் ராஜாவாக வாழ்கிறது. 18 வயது ஆன ராஜாவின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிவதை அந்த வீட்டில் உள்ள நளினி மற்றும் அர்ஜுன் கண்டுபிடித்து அவனை அழிப்பார்கள். கடவுள் சக்தியைப் பெற்ற முனிவர் ஒருவருடைய உதவியால் பல இடையூறுகளைத் தாண்டி ராஜாவை அழிப்பார்கள். இந்த படத்திற்கு பிறகு சக்தி கண்ணன் யார் கண்ணன் என்று அழைக்கப்பட்டார். அதேபோல் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்தை கலைப்புலி எஸ். தாணு அர்ஜுனுக்கு வழங்கினார்.

உருவம் : ஜி. எம். குமார் இயக்கத்தில் மோகன், பல்லவி, ஆர்.பி. விஸ்வம் ஆகியோர் நடித்த படம் உருவம். இதுவரையில் இல்லாத வேறு ஒரு உருவமாக மாறிப் போய் பேயாக நடித்திருப்பார் மைக் மோகன். அரண்மனை வீட்டில் தங்கி இருக்கும் மோகன் குடும்பத்தினரை பில்லி சூனிய தாக்குதல் வேலையை பங்காரு முனியின் உதவியுடன் செய்கிறான் மோகன் அப்பாவின் இல்லீகல் மகன். அந்த அரண்மனையில் மோகனின் உடலில் ஆவி புகுத்தி அனைவரையும் கொன்று விடுகிறது. அந்த பங்காரு முனிவரையும் அந்த ஆவி கொன்றுவிடுகிறது. கடைசியில் ஆர்.பி. விஸ்வம் ஆவிக்கு எதிராக போராடி அதை அழிப்பார்.

Also Read : நான் ஹீரோ, விஜய்க்கு வில்லனா நடிக்க முடியாது.. இயக்குனரை விரட்டி மைக் மோகன் செய்த பெரும் தவறு

Trending News