திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய்யுடன் நடித்த 5 கிளாமர் குயின்ஸ்.. எஸ் ஏ சி, இளைய தளபதி வச்சி உருட்டிய ஹீரோயின்கள்

விஜய் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் அவருடைய படங்களுக்கு மிக்க பலமாக இருந்த சில நடிகைகள். அவர்கள் கிளாமர் குயினாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். அதிலும் எஸ்ஏ சந்திரசேகர் பார்த்து பார்த்து சில ஹீரோயின்களை தேர்ந்தெடுத்து விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

யுவராணி: இவர் தம்பி ஊருக்கு புதுசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அழகன், புது வருஷம், ஜாதிமல்லி, கோயில் காளை, செந்தூர பாண்டி, டூயட் போன்ற பல படங்களில் நடித்து மிகவும் பரிச்சயமான நடிகையாக வலம் வந்தார். இவர் விஜய்க்கு ஜோடியாக செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார். பொதுவாகவே இவருடைய படங்கள் இளசுகளின் மனதில் கொள்ளையடிக்கும் விதமாகத்தான் நடிப்பு இருக்கும்.

Also read: அஜித்துக்கு ஓகே விஜய்க்கு நோ.. தளபதியுடன் ஜோடி சேர மறுத்த உலக அழகி

சங்கவி: தென்னிந்திய நடிகைகளில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் மொத்தம் 80 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் அமராவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரசிகன், நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு போன்ற படங்களில் நடித்து கிளாமர் குயினாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதிலும் விஜய்யுடன் நடித்த இரண்டு படங்களுமே மிக நெருக்கமாக நடித்து பல கிசுகிசுகளில் இவர் பெயர் அடிபட்டது.

சுவாதி: இவர் தமிழில் நடித்த முதல் படமே விஜய்க்கு ஜோடியாக தேவா என்ற படத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வான்மதி, வசந்த வாசல், விஸ்வநாத், செல்வா, மாப்பிள்ளை கவுண்டர், சுந்தரபாண்டியன், துள்ளித் திரிந்த காலம் போன்ற படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் விஜய் கூட ஜோடி போட்டு மூன்று படங்களில் நடித்து பெஸ்ட் ஜோடி என்று இவர்களை சொல்லும் அளவிற்கு அந்த படங்கள் இருக்கும்.

Also read: லியோ படப்பிடிப்பில் கடுப்பான லோகேஷ்.. விஜய்யிடம் ஸ்டிரிக்டா போட்ட கண்டிஷன்

வனிதா விஜயகுமார்: இவர் தமிழில் சந்திரலேகா படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மாணிக்கம் படத்திற்கு பிறகு மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆனார். இவர் நடித்த முதல் படமாக இருந்தாலும் விஜய்யுடன் காதல் காட்சிகளில் ஏற்ற மாதிரி சில காட்சிகளை நடித்திருப்பார்.

ரம்பா: இவர் தமிழில் உழவன் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார். அதன்பின் உள்ளத்தை அளித்தா, செங்கோட்டை, சுந்தர புருஷன், சிவசக்தி, தர்மசக்கரம், அருணாச்சலம், ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய் போன்ற படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் விஜய் உடன் மூன்று படங்கள் சேர்ந்து நடித்து விஜய்யின் வெற்றி நாயகியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அத்துடன் இவர் நடிக்கும் படங்கள் அதிகமான கிளாமர் படமாகவும் இருக்கும்.

Also read: குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த 5 படங்கள்.. அப்பவே பட்டைய கிளப்பிய தளபதி

Trending News