செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ரீ என்ட்ரியில் சபிக்கப்பட்ட 5 நடிகைகள்.. எதிர்பார்ப்புடன் வந்து ஏமாந்து போன லைலா

5 Tamil Actresses Re entry: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகைகளாக இருந்தவர்கள் ஒரு கட்டத்தில் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டனர். ஆனால் அவர்களது தீராத ஆசையால் மறுபடியும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தாலும் அது செல்லுபடியாகாமல் போனது. அப்படிப்பட்ட ஐந்து நடிகைகளை பற்றி பார்ப்போம்.

நதியா: தென்னிந்திய திரை உலகில் 80களில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர்தான் நதியா. அதன் பின்பு 1988 ஆம் ஆண்டு சிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், மறுபடியும் M குமரன் S/O மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தற்போது வரை நடித்து வருகிறார்.

சிம்ரன்: இடுப்பழகியாக ரசிகர்களை வசியம் செய்த சிம்ரன் 2000 ஆம் ஆண்டுகளில் விஜய், அஜித் உடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவை ஆட்டி படைத்தவர். இவர் தனது சிறுவயதில் நண்பரான தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவிற்கு அம்மாவாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின்பு இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது 50வது படமான சப்தம் என்ற படத்தின் அறிவிப்பும் வெளியானது. இந்த படத்தை ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்குகிறார்.

Also Read: சிம்ரனுக்கு நடிப்பு வரலைன்னு செல்போனால் அடித்த இயக்குனர்.. இடுப்பழகிக்கு இந்த நிலைமையா!

ரேவதி: தற்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கெல்லாம் ரேவதி தான் முன்னுதாரணமாக இருந்தார். அந்த அளவிற்கு 80களில் இவரது நடிப்பு உச்சம் பெற்றது. இவர் 1988ல் சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின்பு 2002 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து ஆன பின்பு மறுபடியும் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதிலும் ரீ என்ட்ரியில் ஜோதிகாவுடன் ஜாக்பாட் என்ற படத்தில் காமெடி கலந்த தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி அசர வைத்தார். இருப்பினும் ரேவதி எதிர்பார்த்தது போல் ரீ என்ட்ரியில் அவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

லைலா: 2000ம் ஆண்டுகளில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு கலக்கியவர் தான் லைலா. இவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதால் திருப்பதி படத்தில் ஐட்டம் பாடலுக்கு எல்லாம் நடனம் ஆடினார். அதன்பின் 2006ம் ஆண்டு ஈராக் தொழிலதிபர் மெஹதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என கூறிய லைலா, திடீரென்று தனது முடிவை மாற்றிக் கொண்டு சர்தார் மற்றும் வதந்தி என்ற வெப் சீரிஸ் போன்றவற்றில் நடித்தார். இருப்பினும் அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் ஏதோ உப்புக்கு சப்பாணி போன்றே அமைந்தது. அதிலும் வதந்தி என்ற வெப் சீரிஸில் சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்திருந்தார். இவர் ரீ என்ட்ரியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்திருந்தாலும் ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.

Also Read: கவர்ச்சி ஆட்டத்திற்காகவே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய 5 நடிகைகள்.. சமந்தாவுக்கே டஃப் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்

சோனியா அகர்வால்: மாடலிங்கில் இருந்து அதன் பின் சினிமாவிற்கு வந்த சோனியா அகர்வால், காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. பின்பு தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு அது விவாகரத்தில் முடிந்தது. திருமணத்திற்கு பின்பு சோனியா அகர்வாலுக்கு இருந்த கெட்ட பழக்கத்தால் உடல் எடை ஏறி சுத்தமாகவே பட வாய்ப்பு இல்லாமல் போனது.

இப்போது மறுபடியும் தனது 35 வது வயதில் மீண்டும் சினிமா வாய்ப்பை கைப்பற்ற அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து புதிய அவதாரம் எடுத்தார். இவர் 2001 ஆம் ஆண்டு வானம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். இருப்பினும் அவர் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்பு கிடைக்காமல் சப்போர்ட்டிவ் கதாபாத்திரம் மட்டுமே கிடைக்கிறது.

Also Read: சிம்ரன் வில்லியாக மிரட்டிய 5 படங்கள்.. பொறாமையில் லைலாவை படாத பாடு படுத்திய பானு

Trending News