புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆல்ரவுண்டராக கலக்கும் 5 ஹீரோயின்கள்.. ராஜ மாதாவிற்கு மிஞ்சிய ஆளே கிடையாது

பொதுவாகவே எந்த கேரக்டராக இருந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி நடித்து ஈஸியாக அந்த பெயரை தட்டி செல்வார்கள். ஆனால் அதற்கு இணையாக நடிகைகளும் நடித்து மக்களிடம் பேராதரவை சில ஹீரோயின்கள் வாங்கி இருக்கிறார்கள். அவர்களிடம் எந்தவிதமான கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி நடித்துக் கலக்கக் கூடியவர்கள். அப்படிப்பட்ட நடிகைகளை பற்றி நாம் பார்க்கலாம்.

சௌந்தர்யா: இவர் கன்னட, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கி அன்றைய காலத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக எல்லார் மனதிலும் இடம் பிடித்தவர். இவருடைய மிகப்பெரிய சிறப்பு இவரின் அழகும் வசீகரிக்க செய்யும் தோற்றமும் தான். மேலும் இவருடைய கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி குடும்ப படங்களிலும், அப்பாவித்தனமான நடிப்பையும், பக்தி படங்களுக்கும் ஏற்ற ஒரு நடிப்பை கொடுத்திருப்பார்.

Also read: நடிப்பின் ராட்சசி என ஜோதிகா நிரூபித்த 8 படங்கள்.. வாழ்நாளில் மறக்க முடியாத சந்திரமுகி

ஊர்வசி: இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 702 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர்குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் ஹீரோயினாக முந்தானை முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல படங்களில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். அத்துடன் இவருடைய பேச்சு எதார்த்தமாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசி அனைவரையும் சிரிக்க வைக்க கூடியவர். இவரிடம் எந்தவிதமான கதாபாத்திரமும் கொடுத்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி நடிப்பை வெளிக்காட்டி நடிப்பின் ஊர்வசி நாயகி என்று பெயரெடுத்திருக்கிறார்.

ஜோதிகா: இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்திருக்கிறார். 90களில் முன்னணி நடிகையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் கல்யாணத்திற்கு முன்பு நடித்த படங்களாக இருக்கட்டும் அதற்குப் பிறகு இப்ப நடிக்கக்கூடிய படங்களாகவும் சரி எல்லா படமும் வெற்றி படமாக அமைந்து நிலையான நடிகையாக இருக்கிறார்.

Also read: படையப்பாவில் நீலாம்பரி கேரக்டர்க்கு இந்த நடிகையைத்தான் முதலில் கேட்டாங்களாம்.. எப்பாடா செம காமெடி ஆயிருக்கும்

சினேகா: இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக எல்லாரும் மனதிலும் இடம் பிடித்தவர். இவர் தமிழில் என்னவளே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், வசீகரா போன்ற பல படங்களில் நடித்து வெற்றியை கொடுத்திருக்கிறார். இவருடைய மிகச் சிறப்பே இவரின் குடும்பப் பாங்கான முகம்தான். இவர் ஆல்ரவுண்டராக எல்லா விதத்திலும் கலக்கிய ஒரு நடிகை என்றே சொல்லலாம்.

ரம்யா கிருஷ்ணன்: இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 260 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் அளவிற்கு கச்சிதமாக நடிப்பை வெளிக்காட்டக் கூடிய திறமை இவரிடம் இருக்கிறது. இவர் ரஜினிக்கு எதிரியாக நீலாம்பரி கேரக்டராக இருக்கட்டும் பாகுபலி படத்தில் ராஜமாதா கேரக்டரும் எப்பொழுதுமே பேசப்படும் கதாபாத்திரமாக தான் இருக்கிறது அதற்கு காரணம் இவருடைய நடிப்பு என்று சொல்லலாம். இவர் நடிப்பை மிஞ்சும் அளவிற்கு ஆளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி இருக்கிறார்.

Also read: சினேகா-பிரசன்னா விவாகரத்தா.? உண்மையைப் புட்டுப் புட்டு வைக்கும் பயில்வான்

Trending News