புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

டபுள் ஹீரோ நடிகர் என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகர்கள்.. இன்னும் தனியாக ஹிட் கொடுக்க முடியாத அழகர் ஜெய்

சில நடிகர்கள் என்னதான் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அவர்களால் இப்பொழுது வரை எந்த படங்களிலும் தனியாக நடித்து வெற்றி பெற முடியவில்லை. அதனால் இப்பொழுது வரக்கூடிய சில படங்களில் டபுள் ஹீரோ வைத்து தான் கதைகள் அமைக்கின்றன.

பிரசன்னா: இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அடுத்து கண்ணும் கண்ணும், சீனா தானா போன்று தொடர்ந்து படங்களில் நடித்தார். ஆனால் சமிப காலமாக இவர் படங்களில் இன்னொரு ஹீரோ அல்லது இவர் துணை கதாபாத்திரமாக தான் நடித்து வருகிறார். இவர் தனியாக கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

Also read: இவங்க ரெண்டு பேரை வில்லனா போடுங்க எனக்கூறிய அஜித்.. வாய்ப்பை தவறவிட்ட பிரசன்னா

வைபவ்: இவர் தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்தார். இதனைத் தொடர்ந்து கோவா, மங்காத்தா, சென்னை 28,ஆம்பள,அரண்மனை, மேயாத மான் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும் இவரால் இப்பொழுது வரை தனியாக கதாநாயகனாக நடித்து ஒரு படத்தைக் கூட ஹிட் கொடுக்க முடியாமல் இருக்கிறார்.

ஜீவா: இவர் தந்தையின் ஐம்பதாவது தயாரிப்பில் வெளிவந்த ஆசை ஆசையாய் திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வெற்றி படங்களாக கொடுத்தார். பின்னர் என்றென்றும் புன்னகை படம் மற்றும் அடுத்து வந்த படங்களில் மூலம் இவர் தனியான ஹீரோவாக நடிக்காமல் இவருடன் மற்றொரு முன்னணி நடிகர் சேர்த்து நடிக்கும் கட்டாயத்திற்கு ஆளாகி விட்டார்.

Also read: ஜீவாவின் மார்க்கெட்டை குட்டிச்சுவர் ஆக்கிய 5 படங்கள்.. சுந்தர் சி கூட கை கொடுக்காமல் போன பரிதாபம்

சிபி: இவர் சத்யராஜ் மகன் என்பதால் சினிமாவிற்கு நுழைவதற்கு ஒரு ஈஸியான வழி கிடைத்தது என்றே சொல்லலாம். இவர் சினிமாவில் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் இதுவரை இவர் நடித்த படங்களில் எந்த படங்களிலும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ஜெய்: இவர் பகவதி திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக சினிமாவிற்குள் அறிமுகமானார். பின்பு இவர் நடித்த படங்களில் அதிகமான படத்தில் இரண்டு நடிகர்கள் நடிக்கும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். அப்படி இவர் நடித்த ராஜா ராணி, எங்கேயும் எப்போதும், சுப்பிரமணியபுரம் இன்னும் அதிகமான படங்களில் இவருக்கு இப்படித்தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் அழகர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். ஆனாலும் அந்த படத்தில் இவருடன் சசிகுமார் துணை கதாநாயகனாக நடித்திருப்பார்.

Also read: ஒரே ஒரு ஹிட் படத்திற்காக போராடும் 6 நண்பர்கள்.. கண்டுக்காமல் கழட்டிவிட்ட ஜெய்யின் குரு

Trending News