புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தமன்னா நடிப்பில் மோசமாய் மொக்கை வாங்கிய 5 படங்கள்.. ஏண்டா நடிக்க வந்தோம்னு நினைக்க வைத்த விஜய்

Tamannaah: தமன்னா தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து உள்ளார். ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களுடன் நடித்த தமன்னா சில வருடங்களிலேயே மார்க்கெட் இழந்து விட்டார். அதன் பிறகு அக்கடதேசம் சென்று கலக்கி வந்தார். இந்நிலையில் ஏண்டா இந்த படங்களில் நடித்தோம் என தமன்னாவே நினைக்கும் அளவிற்கு மோசமான 5 படங்களை பார்க்கலாம்.

கேடி : ரவி கிருஷ்ணா, இலியானா, தமன்னா மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் தான் கேடி. இந்த படத்தில் தமன்னாவை காட்டிலும் இலியானாவுக்கு தான் ஸ்கோப் இருந்தது. மேலும் ஆரம்பத்தில் இருந்தே தமன்னாவை வில்லி போல இயக்குனர் சித்தரித்திருப்பார். அதனால் தமன்னாவை கொடூர வில்லியாக தான் ரசிகர்கள் பார்த்தனர்.

Also Read : ஓ சொல்றியா மாமாவுக்கு ஒரு காவாலய்யா! ரஜினியை பின்னுக்கு தள்ளிய தமன்னா, ப்ளூ சட்டையின் சேட்டை

வியாபாரி : எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி படத்தில் தமன்னா நடித்திருந்தார். இதில் எஸ்ஜே சூர்யாவின் மனைவியாக நடித்திருந்தார். இதில் தமன்னாவுக்கு பெரிய அளவில் எந்த காட்சிகளும் இயக்குனர் கொடுக்கவில்லை. முழுக்க முழுக்க எஸ் ஜே சூர்யாவை மையமாக வைத்து தான் கதை நகர்ந்தது.

வேங்கை : தனுஷ் நடிப்பில் வெளியான வேங்கை படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோவை பழிவாங்க துடிக்கும் பெண்ணாக தமன்னா நடித்திருந்தார். ஆனாலும் வில்லிக்கு உண்டான பாவனை இவருக்கு இல்லாததால் ரசிகர்களை இந்த படம் கவர தவறிவிட்டது.

Also Read : ரஜினியை சந்தோஷப்படுத்த விஜய்யை அசிங்கப்படுத்திய தமன்னா.. இனி உங்களுக்கு வாய்ப்பு இல்ல அம்மணி

தில்லாலங்கடி : ஜெயம் ரவி, தமன்னா, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தில்லாலங்கடி. இந்த படம் முழுக்க முழுக்க காமெடி ஆக எடுக்கப்பட்ட நிலையில் மோசமாக பிளாப் ஆனது. இந்த படத்தில் தெரியாமல் நடித்து விட்டோம் என தமன்னாவே பிறகு வருந்தி இருப்பார். அந்த அளவுக்கு மோசமாக இந்த படம் அமைந்திருந்தது.

சுறா : ராஜ்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், தமன்னா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சுறா. இந்த படத்தில் நடித்த போது இது ஓடாது என்று தமன்னா கணித்திருந்தாராம். அந்த அளவுக்கு விஜய் படத்தால் தமன்னா நொந்து போய் உள்ளார். அவர் நினைத்தது போலவே சுறா படம் விஜய்க்கு பெருத்த அடி கொடுத்தது.

Also Read : ஒண்ணுமே தெரியாத புள்ள பூச்சி போல் தமன்னா நடித்த 5 படங்கள்.. ஆனா இப்ப ஐட்டம் நடிகையாக மாறிட்டாங்களே

Trending News