இயக்குனர் மோகன் ராஜா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பணியாற்றி வருகிறார். இவர் தெலுங்கில் தான் முதலில் இயக்குனராக அறிமுகமானார். பின்பு இவர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக செயல்பட்டு வருகிறார். இவரது தம்பியும் சினிமாத்துறைக்கு அறிமுகம் ஆக்கியவர் இவர்தான்.
ஜெயம்: 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் திரைப்படம் இதை தெலுங்கு படத்தில் இருந்து ரீமேக் செய்தார். இந்தப்படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டான படமாக அமைந்தது. இந்த படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்து தனது தம்பியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அறிமுகமான இந்த படத்தின் மூலம் ரவிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இவரின் அடையாளமாக ஜெயம் ரவி என்று மாறியது.
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி: இப்படம் முதல் படத்தின் வெற்றியை வைத்து அடுத்த வருஷமே மறுபடியும் ஒரு படத்தை இயக்கிவிட்டார். இந்தப் படமும் தெலுங்கில் வந்த ரீமேக் படம் தான். இந்தப் படம் அம்மாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. இதுவும் தமிழில் பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.
Also read: பாலிவுட்டில் ஜெயம் ரவி.. அஜித் பட தயாரிப்பாளரின் பக்கா பிளான்!
உனக்கும் எனக்கும்: 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் தெலுங்கு படத்தில் இருந்து ஹீரோவை மட்டும் மாற்றி அதற்குப் பதிலாக தம்பி நடிக்க வைத்தார். இந்தப் படம் அண்ணன் தங்கையின் பாசத்தையும் மற்றும் ஒரு உணர்வுபூர்வமான காதல் கதையாகவும் எடுக்கப்பட்டார். இந்தப் படமும் சூப்பர் டூப்பராக மாறியது.
சந்தோஷ் சுப்பிரமணியன்: 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் ஜெயம் ரவி,ஜெனிலியா, பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்து பெரிய அளவில் வெற்றி படமாக கொடுத்தார். இந்தப் படமும் தெலுங்கில் வந்து தமிழில் ரீமேக் செய்த படம்.
Also read: மோகன் ராஜா படத்தில் 3வது முறையாக நடிக்கும் பிரபல நடிகை… அடடே இது மெகா ஹிட்டாச்சே
தில்லாலங்கடி: 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த இத் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமன்னா நடித்திருப்பார். இப்படமும் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்த படம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையே வைத்து எடுக்கப்பட்ட படம். இதுவும் பெரிய அளவில் வெற்றி நடை போட்டது.
இப்படி தம்பியை வைத்து தெலுங்கில் ரீமேக் செய்து பெரிய அளவில் இந்த ஐந்து படங்களையும் வெற்றி படமாக மாற்றியது மட்டும் அல்லாமல் இவரது தம்பியும் பெரிய நடிகராக உருவாக்கி விட்டார். ஜெயம் ரவி எப்போதெல்லாம் படத்தின் தோல்வியால் துவண்டு இருப்பாரோ அப்பொழுதெல்லாம் கைகொடுக்கும் வகையில் இவர் முன்னே வந்து இவரை தூக்கி விடுவார். எத்தனையோ இயக்குனர்கள் தெலுங்கு படத்தை ரீமேக் செய்து தமிழில் கொடுத்தாலும் இவரை போல யாரும் வெற்றியை பார்த்ததில்லை. ஏனென்றால் இவர் தமிழ் சினிமா துறைக்கு ஏற்றவாறு கதைகளத்தை கொண்டு போவார் இதுவே இவரின் வெற்றியின் ரகசியம்.
Also read: உச்ச நடிகரால் பிரசாந்த் படத்தை இயக்காமல் போன மோகன்ராஜா.. பக்காவாக பிளான் போட்ட தியாகராஜன்