சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஹீரோக்களை தாண்டி அதிக சம்பளம் வாங்கும் 5 இசையமைப்பாளர்கள்.. ரஹ்மானே ஓரம் கட்டிய பிரபலம்

பொதுவாகவே சினிமாவில் படங்கள் ஹிட் ஆவதற்கு கதைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்தப் படத்தில் வரும் பாடல்களுக்கு இசை அமைப்பது யார் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் வெற்றி ஆவதற்கு இவர்களது இசையும் பெரிய காரணம் என்றே சொல்லலாம்.  அதற்காக இவர்கள் வாங்கிய சம்பளத்தை பற்றி பார்க்கலாம்.

தமன்: இவர் பாய்ஸ் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இசையமைப்பாளராக இவரது பயணத்தை மாற்றி தொடர்ந்து வந்த படங்களுக்கு இசையமைத்து பெரிய அளவில் இசையமைப்பாளராக புகழ்பெற்றார். மேலும் இவர் வாரிசு திரைப்படத்தில் இசையமைத்து அனைத்து பாடல்களையும் வெற்றியடைய செய்தார். மேலும் அந்த படத்திற்காக இவர் 4 கோடி சம்பளத்தை பெற்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் இசையமைக்கும் பாடல்களுக்கு அதிக சம்பளத்தை கேட்டு வருகிறார்.

Also read: பாட்டு மட்டும் இல்ல போஸ்டரும் காப்பி தான்.. தமன் வெளியிட்ட போஸ்டரால் ரத்தகளரியான சோசியல் மீடியா

தேவி ஸ்ரீ பிரசாத்: இவர் 20 வருடங்களாக 100 படத்திற்கு மேல் பணியாற்றி இருக்கிறார். இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. அதிலும் இவர் இசையமைத்த புஷ்பா படத்தின் பாடல்கள் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இடங்களில் பட்டி தொட்டி எல்லாம் பறந்தது. மேலும் இவர் அதற்காக வாங்கிய சம்பளம் 5 கோடி. இதைத் தொடர்ந்து அவர் இசையமைக்கும் பாடல்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறார்.

அனிருத்: இவரது பாடல்களுக்கு எப்பொழுதுமே ஒரு மவுஸ் இருந்து வரும் அந்த அளவிற்கு இவர் பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்திருப்பார். அது மட்டும் இல்லாமல் சின்ன குழந்தைகள் முதல் இவரது பாடலை முணுமுணுக்க செய்யும்படி வைத்திருக்கிறார். மேலும் இவர் இசையமைத்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு 6 கோடி சம்பளம் வாங்கினார். அத்துடன் இவரின் அடுத்த படமான ஜெயிலர் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: குடும்பம் ஒன்னு சேர நேரத்துல அனிருத் வேணாம் என ஒதுக்கிய ரஜினி.. பேராசையால் பட வாய்ப்பை பறித்த லைக்கா

ஏஆர் ரகுமான்: இசை புயல் ஏஆர் ரகுமான் என்றாலே அனைவருக்கும் தெரிந்த இசையமைப்பாளர். இந்தியாவின் முதன் முதலாக இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கிய ஆஸ்கார் நாயகன். இவருடைய தற்போதைய சம்பளம் 10 கோடி. என்னதான் இவர் பிரம்மாண்டமாக இசையமைத்தாலும் இவரை ஓரம் கட்டும் அளவிற்கு ஒரு இசையமைப்பாளர் வந்துள்ளார்.  அவர் தான் ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி.

கீரவாணி: இவர் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர். தெலுங்கில் மகதீரா, பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற மிகப் பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த படங்களில் வரும் அனைத்து பாடல்களுமே எல்லாரும் மனதையும் ஈர்த்தது.  மேலும் இவர் ஆர்ஆர்ஆர் படத்துக்காக 16 கோடி சம்பளத்தை பெற்றிருக்கிறார்.

Also read: கழட்டி விடப்படும் ஏஆர் ரகுமான்.. ஆஸ்கர் நாயகனுக்கு இப்படி ஒரு நிலைமையா?

Trending News