Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

குபேராவை தவறவிடாதீங்க.! மரண மாஸான 5 காரணங்கள்

குபேராவை தவறவிடாதீங்க.! மரண மாஸான 5 காரணங்கள்

Dhanush : சேகர் கம்முலா மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா படம் வருகின்ற 20ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த […]

Dhanush : சேகர் கம்முலா மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா படம் வருகின்ற 20ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க 5 காரணங்களை பார்க்கலாம்.

முதலாவதாக தனுஷின் படம் என்பது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறது. அதோடு தன்னுடைய உடலை மேலும் குறைத்து ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவரின் இந்த மாற்றத்தை பார்க்க கண்டிப்பாக குபேரா படத்தை பார்க்க வேண்டும்.

அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா தான். இவர் இயக்கத்தில் முந்தைய படங்களான ஃபிடா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில் இந்தப் படத்தை எந்த கோணத்தில் எடுத்திருக்கிறார் என்ற ஆர்வம் இருக்கிறது.

குபேரா படத்தை கட்டாயம் பார்க்க ஐந்து காரணங்கள்

இதைத்தொடர்ந்து கதாநாயகி ராஷ்மிகா மந்தனா தான் மூன்றாவது காரணம். அதாவது இதுவரை வழக்கமாக நடிக்கும் கதாபாத்திரங்களில் இருந்து வேறுபட்டு ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தை கையாண்டு இருக்கிறார். இது படத்தின் டிரைலரிலேயே தெரிந்தது.

நான்காவதாக நாகர்ஜுனா தோழா படத்திற்கு பிறகு குபேரா படத்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் பல சிறப்பம்சங்கள் அமைந்திருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

மேலும் குபேரா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசை அமைத்திருக்கிறார். உணர்ச்சிபூர்வமான கதைக்களத்தை சரியாகப் பிரதிபலிக்கும் விதமாக இவரின் இசை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இந்த காரணங்களுக்காக குபேரா படத்தை தவறவிடாமல் தியேட்டரில் பாருங்கள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.