புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நடிகர்களின் அடையாளத்தை வைத்து வந்த 5 பாடல்கள்.. வத்திக்குச்சி ஒல்லிக்குச்சி என கிண்டலுக்கு ஆளான தனுஷ்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் சில நடிகர்கள் ஆரம்ப காலத்தில் பல போராட்டங்களை கடந்து தற்போது பல கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களுடைய படங்களிலே பாட்டு போடப்பட்டிருக்கும். அந்த நடிகர்கள் யார் என்றும் அவர்களுக்காக போடப்பட்டிருக்கும் பாடல்களைப் பற்றியும் பார்க்கலாம்.

கமல்: இவர் நினைத்ததை செய்து முடிக்கும் சகலகலா வல்லவர். எந்த மாதிரியான கேரக்டர் கொடுத்து இருந்தாலும் அதற்கேற்ற மாதிரி கெட்டப் போட்டு அதை சரியாக பயன்படுத்தி உலக நாயகன் என்று பெயர் எடுத்தவர். இவருக்கேற்ற பாடல்களாக வந்த பாடல் தான் “நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன் ரசனை மிகுந்த ரகசிய கலைஞன் உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு உலக நாயகனே”.

Also read: கமலுடன் நடித்து ரஜினியுடன் நடிக்காத 5 நடிகைகள்.. இன்று வரை வருத்தப்படும் புன்னகை அரசி

ரஜினி: சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் வில்லனாகவும், குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோவாக நடித்து தற்போது 170 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். தற்போது இவர் பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இவருக்கேற்ற பாடலாக வந்த பாட்டு தான் ” சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகளும் சொல்லும்” இந்தப் பாடல் இவருக்கேற்ற பாடலாகவே இருக்கிறது.

விஜய்: சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வாரிசு நடிகராக வந்திருந்தாலும் அவர்களால் பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடிந்து இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் விஜய் அவருடைய அப்பாவின் உதவியால் சினிமாவிற்கு வந்திருந்தாலும் இவ்வளவு தூரத்துக்கு அவரால் நிற்பதற்கு முக்கிய காரணம் அவருடைய முயற்சியும் கடின உழைப்பும்தான். தற்போது இளைய தளபதியாக எல்லாருடைய மனதில் இடம் பிடித்து இவருக்கு ஏற்ற மாதிரி ஒரு பாடல் வந்திருக்கிறது என்றால் அதுதான் தற்போது வெளிவந்த வாரிசு படத்தின் ” தீ இது தளபதி… பேர கேட்டா விசில் அடி… தீ இது தளபதி… உங்க நெஞ்சின் அதிபதி…”

Also read: விஜய்யின் தோல்வி படத்துக்கு காரணம் ரஜினி தான்.. மனம் திறந்து பேசிய கலைப்புலி எஸ் தாணு

அஜித்: எந்தவித தலைக்கனமும் இல்லாமல் தன்னம்பிக்கையால் இவ்வளவு தூரம் ஒருவருடைய வளர்ச்சி இருக்கிறது என்றால் கண்டிப்பாக அஜித்தாக தான் இருக்க முடியும். அதற்காகவே இவருடைய ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகிறார்கள். இவர் படங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை வருடத்திற்கு ஒரு முறையாவது இவரது படங்கள் வெளி வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று இவருடைய ரசிகர்கள் இவர் படங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவருக்காக ஒரு பாடல் வந்ததுதான் “நடையில் உடையில் படையில் கொடையில் தொடை தட்டி அடிப்பதில் தலை வெட்டி முடிப்பதில் தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா”.

தனுஷ்: இவர் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களை பார்க்கும் பொழுது அந்த நேரத்தில் அதிகமான கேலியும் கிண்டலும் தான் செய்தார்கள். இவர் எல்லாம் நடிக்க வரவில்லை என்றால் என்ன என்று சொல்லி அதிலும் அவருடைய உடம்பைப் பற்றி வத்திக்குச்சி ஒல்லிக்குச்சி என்று நக்கலாக பேசியதுதான் அதிகமாக இருக்கும். அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தற்போது டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் மற்றும் கோலிவுட் ஆகிய நான்கு நேஷனல் அவார்டுகளை வாங்கி இந்திய சினிமாவிற்கு பெருமை வாங்கி கொடுத்து இருக்கிறார் தனுஷ். அத்துடன் இவரை கிண்டல் பண்ணும் சில பேருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவருக்கு ஏற்ற மாதிரி ஒரு பாடல் வெளிவந்திருக்குது என்றால் அதுதான் சுள்ளான் படத்தில் “வத்திகுச்சி வத்திகுச்சி ஒல்லியின்னு பார்த்தா பத்திக்குவ பத்திக்குவ தள்ளி நில்லு”.

Also read: துடித்து போன அஜித், வியந்து பார்த்த ஷாலினி.. 23 வருட திருமண வாழ்க்கையின் ரகசியம்

Trending News