திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

5 படங்களால் ஆர் பி சௌத்ரி கையில் கூரையை பிச்சிக் கொட்டின கோடிகள்.. மொத்தமாய் ஏமாற்றிய ஜீவா

ஆர்.பி. சௌத்ரி ஒரு தயாரிப்பாளர், சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் ஓனர். இவர் தமிழ் சினிமாவில் நிறைய படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்து கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார். இவர் மட்டுமல்லாமல் இவரை வைத்து நிறைய பேர் லாபத்தை பார்த்திருக்கிறார்கள். ஆனால் இவரது வாரிசு நடிகர்களான ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் எதிர்பார்த்த அளவுக்கு சம்பாதிக்க முடியவில்லை. இவர் தயாரிப்பில் வெளிவந்து அதிக லாபத்தை பார்த்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

நாட்டாமை : கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு நாட்டாமை திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், மீனா, குஷ்பூ, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் கிராமங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்தின் தலைவராக நாட்டாமை பொறுப்பிலிருந்து நேர்மையான தீர்ப்பை வழங்கக்கூடிய கதையாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. முக்கியமாக 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.

Also read: நீலாம்பரிக்கு நிகரான அக்மார்க் வில்லி.. வரலட்சுமி சரத்குமாரின் சிறந்த 5 படங்கள்

சூரிய வம்சம்: விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு சூரியவம்சம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா, பிரியா ராமன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்தார்கள். இதில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இப்படம் படிக்காத ஒருவருக்கும், படித்த பெண்ணுக்கும் திருமணம் நடந்து அவர்கள் வாழ்வில் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இது மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக மாறியது.

துள்ளாத மனமும் துள்ளும்: எழில் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு ஆகியோர் நடித்தார்கள். இக்கதையானது ஒருவரை நல்லவர் என்று மனதளவில் நினைத்தபோது, நேரில் பார்க்கும் பொழுதெல்லாம் தவறான சூழ்நிலைகளில் பார்த்து அவர் தப்பானவர் என்று முடிவு செய்து பிறகு அவரை எப்படி எந்த சூழலில் சந்திக்கிறார் என்பதை படமாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தின் கிளைமாக்ஸ்சில் வரும் காட்சியில் ஒரு உணர்வுபூர்வமான காதலை அழகாக வெளிக்காட்டிற்கும். இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Also read: சூப்பர் ஸ்டார் புகழ் சரத்குமார் வில்லனாக நடித்த 5 படங்கள்.. மிஸ்டர் சென்னை வென்றதால் வந்த வாய்ப்பு

மாயி : சூரிய பிரகாஷ் இயக்கத்தில் 2000ம் ஆண்டு மாயி திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், மீனா, வடிவேலு மற்றும் கோவை சரளா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் சரத்குமார் மாயாண்டியாகவும், மீனா புவனேஸ்வரி ஆகவும் நடித்திருக்கிறார்கள். இதில் வடிவேலு மொக்கச்சாமி என்ற கதாபாத்திரத்தில் மூலம் காமெடி செய்திருக்கிறார். அதிலும் “வாமா மின்னல்” என்று வரும் காட்சிகள் மிகவும் பிரபலமானது. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆனது.

பூவே உனக்காக : விக்ரமன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு பூவே உனக்காக திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த் மற்றும் சார்லி ஆகியோர் நடித்தார்கள். இப்படம் காதலுக்கு முக்கியத்துவமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் வசனங்கள் எல்லார் மனதிலும் ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தும். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. அத்துடன் தமிழ்த் திரையுலகில் விஜய்யின் வாழ்க்கையில் முதல் பிளாக்பஸ்டர் படமாக திருப்புமுனையை ஏற்படுத்தியது. மற்றும் இத்திரைப்படம் திரையரங்களில் 250 நாட்களுக்கு மேல் ஓடியது.

Also read: இந்த 5 ஹீரோக்களை கலாய்க்கவே தியேட்டருக்கு சென்ற இளசுகள்.. நம்பர் ஒன் இடத்தை பிடித்தது லெஜெண்ட் அண்ணாச்சி

Trending News