செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பாலுமகேந்திராவை பின்பற்றும் பஞ்சபாண்டவர்கள்.. பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டல்லாம் இவங்க கையில்தான்

சினிமாவில் ஒரு திரைப்படம் விறுவிறுப்பாகவும், பிசிறு தட்டாமலும் செல்வது ஒளிப்பதிவாளர் கையில்தான் இருக்கிறது. இது தவிர படத்தில் நடிக்கும் நடிகர்களை குறிப்பாக ஹீரோயின்களை மிகவும் அழகாக காட்டுவதும் இவர்கள்தான்.

அப்படி சினிமாவில் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்தவர் இயக்குனர் பாலுமகேந்திரா. இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பு பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்றைய காலகட்ட சினிமாவின் பொக்கிஷமாக பார்க்கப்பட்டவர் பாலுமகேந்திரா.

தற்போது பல ஒளிப்பதிவாளர்கள் இருந்தாலும் ஒரு சிலர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் தங்கள் திறமைகளை காட்டி மக்களை ஈர்த்து வருகிறார்கள். இவர்கள் செய்யும் மாயாஜால வித்தைகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விடும். அப்படி பிரபலமாக இருக்கும் ஐந்து ஒளிப்பதிவாளர்களைப் பற்றி காண்போம்.

நீரவ்ஷா: இவர் தமிழில் நம்ம வீட்டு பிள்ளை, வலிமை, சூப்பர் டீலக்ஸ் போன்ற பல திரைப்படங்களை ரொம்பவும் கலர்புல்லாக நமக்கு கொடுத்தவர். பல மொழிகளில் பிஸியாக இருக்கும் இவர் ஒளிப்பதிவிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். தற்போது துப்பறிவாளன் 2 உட்பட பல திரைப்படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

பிசி ஸ்ரீராம்: தமிழில் மிகப் பிரபலமாக இருக்கும் ஒளிப்பதிவாளர்களில் இவர் முக்கியமானவர். இவருக்காக காத்திருந்த இயக்குனர்கள் ஏராளம். இவரின் ஒளிப்பதிவில் வெளியான அலைபாயுதே, வரலாறு, ரெமோ, ஓ காதல் கண்மணி போன்ற திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் சிவன்: இவர் இயக்குனர் மணிரத்னத்தின் பேவரைட் ஒளிப்பதிவாளர். ஆரம்ப காலத்தில் மணிரத்னத்தின் ரோஜா, இருவர், தளபதி உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடைசியாக இவர் தமிழில் தர்பார் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார் அதைத் தொடர்ந்து தற்போது இவர் மலையாளம், இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கே வி ஆனந்த்: இவர் தமிழில் சிவாஜி, முதல்வன், கில்லி, பாய்ஸ் உள்ளிட்ட பல திரைப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். அதோடு கோ, மாற்றான், கவன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் கடைசியாக காப்பான் திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக இவர் கடந்த வருடம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

வேல்ராஜ்: அசுரன், வடச்சென்னை, ஆடுகளம், கொம்பன் போன்ற பல திரைப்படங்களை இவர் ஒளிபதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வேலையில்லா பட்டதாரி, தங்க மகன் உள்ளிட்ட திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். தற்போது இவர் ஒரு நடிகராகவும் மாறியிருக்கிறார். சமீபதில் வெளியான உடன் பிறப்பே திரைப்படத்தில் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News