புதன்கிழமை, நவம்பர் 20, 2024

விக்ரம் கேரியரில் மறக்க முடியாத 5 படங்கள்.. பெரிய அளவில் மெனக்கெடு செய்தும் வெற்றி பெறாத காசி

விக்ரம் சினிமாவில் நுழைந்த காலத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு ஒரு ஹீரோவான அங்கீகாரத்தை கொடுத்தது சேது படம் தான். இதற்குப் பிறகு பல படங்களில் நடித்து இப்பொழுது ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். அதே மாதிரி இவர் ஒரே வருஷத்தில் நடித்த படங்கள் மூலம் வெற்றி, தோல்வியும் என இரண்டையும் சந்தித்திருக்கிறார். அந்தப் படங்களை பற்றி பார்க்கலாம்.

தில்-காசி: தரணி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு தில் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் சேது படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரமிற்கு அதிக அளவில் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்று வெற்றி படமாக இவருக்கு கை கொடுத்தது. ஆனால் அதே வருஷத்தில் வெளியான காசி படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்த படத்திற்காக இவர் அதிகளவில் மெனக்கெடு செய்து கண் தெரியாதவர் போல் நடித்திருப்பார். ஆனாலும் இந்த படம் இவருக்கு ஒரு தோல்வி படமாக அமைந்தது.

Also read: கமலின் கனவு படத்தில் நடிக்க துணிந்த விக்ரம்.. உண்மையை போட்டுடைத்த விக்ரம் பட ஏஜென்ட்

ஜெமினி-சாமுராய்: சரண் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு ஜெமினி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விக்ரம் ஒரு யதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி அதிக அளவில் பாராட்டைப் பெற்றது. மற்றும் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றது. ஆனால் அதே வருஷத்தில் வெளியான சாமுராய் திரைப்படம் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நேர்மையானவராக நியாயத்துக்கு போராடும் மனிதராக நடித்திருப்பார். ஆனால் இந்த படம் சராசரி விமர்சனத்தை பெற்று இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

தூள்-கிங்: தரணி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு தூள் திரைப்படம் வெளியானது. இப்படம் ஆக்ஷன் திரைப்படமாக விக்ரம் நடித்திருப்பார். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. ஆனால் அதே வருஷத்தில் வெளியான கிங் திரைப்படம் ஒரு மேஜிக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இந்த படம் மிகப்பெரிய தோல்வியை இவருக்கு கொடுத்தது.

Also read: தங்கலான் படத்திற்கு பின் அடுத்த பட இயக்குனரை லாக் செய்த விக்ரம்.. மகனால் தந்தைக்கு அடித்த ஜாக்பாட்

சாமி-காதல் சடுகுடு: ஹரி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு சாமி திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம் ஒரு நேர்மையான போலீஸ்காரராக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்படம் சூப்பர் ஹிட் படமாக ஆனது. ஆனால் இதற்கு அடுத்து வெளிவந்த காதல் சடுகுடு படம் ஒரு காதல் நிறைந்த குடும்ப படமாக வெளிவந்தது. இப்படம் இவருக்கு மோசமான தோல்வியை கொடுத்தது.

பிதாமகன்-அருள்: பாலா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு பிதாமகன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விக்ரம் கல்லறையில் வேலை பார்க்கும் சித்தனாக நடித்திருப்பார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. இதற்கு அடுத்த வருஷத்தில் வெளியான அருள் திரைப்படம் குடும்ப படமாக வெளிவந்தது. ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. அத்துடன் இப்படத்தில் லாஜிக் ஏதும் இல்லாத காரணத்தால் பார்வையாளர்களை ஈர்க்கத் தவறிய படமாக ஆனது.

Also read: முதல் படத்திலேயே வெற்றி கண்ட 6 இயக்குனர்கள்.. விக்ரமை பைத்தியமாக அலையவிட்டு ஹிட் கொடுத்த பாலா

- Advertisement -spot_img

Trending News