வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய் சுட்டு சூப்பர் ஹிட்டான 5 தெலுங்கு படங்கள்.. மகேஷ்பாபு படத்தையே விடாமல் துரத்தும் தளபதி

Vijay Remake Movies: விஜய்க்கு இப்போது மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. ஆனால் ஆரம்பத்தில் விஜய் தெலுங்கு டப்பிங் படங்களில் நடித்திருந்தார். அதுவும் குறிப்பாக மகேஷ் பாபுவின் படங்களின் ரீமேக்கில் தான் விஜய் நடித்திருந்தார். அந்த வகையில் விஜய் தெலுங்கில் சுட்டு சூப்பர் ஹிட் ஆன ஐந்து படங்களை இப்போது பார்க்கலாம்.

பிரியமானவளே : செல்வ பாரதி இயக்கத்தில் விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் 2000 ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பிரியமானவளே. இப்படம் 1996 ஆம் ஆண்டு பவித்ரா பந்தம் என்று தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான படத்தின் ரீமேக் ஆகும். கமர்சியல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

Also Read : வெளிநாடுகளில் விஜய் இல்லாமல் வசூல் சாதனை படைத்த 7 தமிழ் படங்கள்.. போர் தொழில் மொத்த வசூலை மிஞ்சிய ரஜினி

பத்ரி : அருண் பிரசாந்த் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு விஜய் மற்றும் பூமிகா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பத்ரி. இந்த படத்தில் குறும்புத்தனமான மகனாக விஜய் நடித்திருப்பார். இப்படம் 2000 ஆண்டு தெலுங்கில் வெளியான பத்ரி என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யூத் : கடந்த 2002 ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய், விவேக் மற்றும் பல பிரபலங்கள் என் நடிப்பில் வெளியான திரைப்படம் யூத். இப்படம் தெலுங்கில் சிரு நவ்வுட்டோ என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் யூத் படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

Also Read : விஜய் மாதிரி யார் நாளும் நடிச்சிடலாம்.. ஆனா அஜித்தின் இந்த கேரக்டர் நடிக்கவே முடியாது

கில்லி : கடந்த 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் தான் கில்லி. விஜய்யின் பிரண்ட்ஸ் பட வசூலை இந்த படம் முறியடித்து இருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஒக்குடு என்ற படத்தின் ரீமேக் ஆக கில்லி படம் எடுக்கப்பட்டது.

போக்கிரி : பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் போக்கிரி. விஜய்யின் திருப்பாச்சி பட வசூலை இப்படம் முறியடித்து இருந்தது. மகேஷ்பாபு மற்றும் இலியானா தெலுங்கில் நடித்த போக்கிரி படத்தின் ரீமேக்காகத் தான் பிரபுதேவா இப்படத்தை இயக்கியிருந்தார்.

Also Read : விஜய்யின் வாழ்நாள் சாதனையை செஞ்சு விட்ட ஜெயிலர்.. ரஜினியின் அசர வைக்கும் ரெக்கார்ட்

Trending News