படம் வெளிவருவதற்கு முன்னதாகவே வியாபாரத்தை தொடங்கி அமோக லாபம் பெற்ற 5 படங்களின் விவரங்களைப் பற்றி பார்க்கலாம். அப்பவும் சரி இப்பவும், சரி நம்பர் ஒன் இடத்தில் வசூலில் ஆட்டி படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே.
ஆனால் அதைத் தாண்டி விஜய்யின் வசூல் வேட்டை தற்போது அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இப்படி இருக்கையில் படம் ரிலீஸ் ஆகாமலேயே ரஜினியின் 2.0 படம் 500 கோடிக்கு மேல் பிசினஸ் செய்து தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.
Also Read: வணங்கான் கைவிட்டாலும் சூர்யா அடுத்தடுத்து கமிட்டான 5 படங்கள்.. சமரசமாக முடிந்த அருவா மோதல்
பொங்கலுக்கு துணிவுக்கு போட்டியாக களம் இறங்குகிறார் விஜய். தற்போது வரை வாரிசு படம் முன் விற்பனை எவ்வளவு என்று பார்த்தால் கிட்டத்தட்ட 270 கோடியாம். அஜித்தின் துணிவை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 90 கோடி வசூலாகும் என் எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.
மூன்றாவது இடத்தில் கபாலி 225 கோடியும், 4வது இடத்தில் தர்பார் 220 கோடிக்கும் ரிலீஸ்க்கு முன்கூட்டியே விற்பனையாகியுள்ளது. மீண்டும் தளபதி விஜய் மற்றும் அட்லியின் கூட்டணியில் வெளிவந்த பிகில் திரைப்படம் 5வது இடத்தில் கிட்டத்தட்ட 215 கோடி பிசினஸ் செய்துள்ளதாம்.
இதெல்லாம் சாதனையாக இருந்தாலும் முடிந்துபோன கதை தற்போது சூர்யாவின் 42வது படம் உருவாக உள்ளது. இந்த படம் சரித்திரம் பேசும் படமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர். இந்தப்படத்தின் தற்போதைய பிசினஸ் மட்டும் 200 கோடிக்கு மேல் செய்துள்ளது என்பது தான் திகைக்க வைத்த சம்பவம்.
ஜெய் பீம் வெற்றிக்குப்பின் சூர்யா ரோலக்ஸ் என்ற ஒரே கதாபாத்திரத்தை வைத்து உலக பேமஸ் ஆகி விட்டார். இதற்கு முக்கிய காரணம் லோகேஷ், மீண்டும் அதே வில்லனாக விக்ரம் 2 படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. பாலா மற்றும் வெற்றிமாறன் படம் தாமதம் ஆனாலும் சிறுத்தை சிவாவின் இந்த படம் சூர்யாவை இன்னும் உச்சத்திற்கு கொண்டு போகும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.
Also Read: 2022-ல் 100 முதல் 500 கோடி வரை வசூல் செய்த 7 படங்கள்.. எதிர்பாராமல் வாரி கொடுத்த லோ பட்ஜெட் மூவிஸ்