ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

இவங்க நடிச்சாலே Flop தான்.. குண்டு..ராசியே இல்ல.. விமர்சனங்களை கடந்து 2 கோடி சம்பளம் வாங்கும் நடிகை

ஹிந்தி மொழியில் பிரபலமான நடிகைகளுள் இவரும் ஒருவராவார். தனது திரைப்பட வாழ்கையை சல்மான் கானுடன் தாபங் என்ற படத்தின் மூலம் தொடங்கினர். தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார். அனால் அதற்க்கு பிறகு இவர் நடித்த பல படங்கள் Flop ஆனது.

தொடர் தோல்வியும் விமர்சனமும்

திரையுலக குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தானும் நெப்போடிஸத்தை எதிர்கொண்டதாகவும், தனக்கு பதிலாக பெரிய நட்சத்திரங்கள் படங்களில் நடித்ததாகவும் அந்த நடிகை பல பெட்டிகளில் சொல்லி இருக்கிறார். மேலும், தனது உடல் தோற்றத்தால் கேலிக்கு ஆளானதாகவும் தெரிவித்திருந்தார். பொதுவாக ஒல்லியான நடிகைகளை விரும்பும் பாலிவுட், இவரை குண்டு என்று சொல்லி கேலி செய்துள்ளார்கள்.

இருப்பினும், அவர் பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு ஜோடியாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். பாங் திரைப்படத்திற்கு பிறகு சோனாக்ஷி நடித்த ரவுடி ரத்தோர், படமும் ஹிட் ஆனது. அதை தொடர்ந்து அவர் நடித்த Holiday படமும் வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு தனது திரை வாழ்க்கையில் அந்த நடிகை சரிவை சந்தித்தார்.

தோல்விகளை தகர்த்தெறிந்து கோடிகளில் சம்பளம்

அவர் நடித்த 11 படங்களும் தோல்வியடைந்தன. ஆக்‌ஷன் ஜாக்சன், அகிரா, ஃபோர்ஸ் 2, நூர், இத்தேபாக், வெல்கம் டு நியூயார்க், கந்தானி ஷஃபாகானா உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தன. பின்னர் அவர் மிஷன் மங்கல்(Mission Mangal) படத்தில் நடித்ததன் மூலம் வெற்றி பெற்றார். ஆனால் மீண்டும் அவரது படங்கள் தோல்வியடைந்தன.

இப்படி பட்ட சூழ்நிலையில் நடிகை சோனாக்ஷி சின்ஹா க்கு திருப்புமுனையாக அமைந்தது ஒரு ott சீரிஸ். ஆம் நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் தொடர் தோல்விகளை கொடுத்து, மீண்டும் கம் பேக் கொடுத்திருக்கிறார். இவரை யோசித்தால், சாறி கே பால் சா பாட்டு தான் ஞாபகம் வரும். அந்த நடிகை பல ஏற்ற இறக்கங்களை பாலிவுட்டில் சந்தித்துள்ளார்.

rajini-sonakshi-sinha-lingaa-cinemapettai
rajini-sonakshi-sinha-lingaa-cinemapettai

இவருக்கு 2023ல் OTT-யில் வெளியான தஹாத் சீரிஸ் மூலம் பாராட்டை பெற்றது. அதை தொடர்ந்து, சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீராமண்டி (Heeramandi) தொடரிலும் சோனாக்ஷி சின்ஹா நடித்தார். இந்த தொடரில் அவரது நடிப்பிற்காக நிறைய பாராட்டுகளை பெற்றார். இதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, ஒரு OTT நிகழ்ச்சிக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News