Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

‘தேரே இஷ்க் மேன்’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கைகோர்க்கும் வெற்றி கூட்டணி -தனுஷின் அடுத்த பாலிவுட் அவதாரம்!

‘தேரே இஷ்க் மேன்’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கைகோர்க்கும் வெற்றி கூட்டணி -தனுஷின் அடுத்த பாலிவுட் அவதாரம்!

நடிகர் தனுஷ் மற்றும் பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் மீண்டும் புதிய படம் ஒன்றில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே இந்தக் கூட்டணியில் உருவான படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில்,தற்போது நான்காவது முறையாக இருவரும் இணைந்து பணியாற்றத் தயாராகி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான தனுஷின்‘தேரே இஷ்க் மேன்’படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து,இந்தப் புதிய கூட்டணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை உருவாகவுள்ள படம் வரலாற்றுப் பின்னணியில் அமைந்த காதல் மற்றும் ஆக்‌ஷன் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும்,படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் அதற்கான தயாரிப்பு வேலைகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடிகர் தனுஷ் தமிழில் டைரக்டர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் சிறுத்தை சிவா ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் படப்பிடிப்புகளை முடித்த பிறகு,ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் மற்றும் ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் உருவாகும் இந்த நான்காவது படம் குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.