Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதியை நினைத்து காந்திமதி அம்மா ரொம்பவே வருத்தப்பட்டு மருமகளிடம் பேசிக்கொள்கிறார். அந்த நேரத்தில் சக்திவேல் மற்றும் முத்துவேல் வீட்டிற்கு வந்து என்னாச்சு ஏன் அழுகிறாய் என்று கேட்கிறார்கள். அதற்கு காந்திமதி, கோமதியை நினைத்து கொஞ்சம் கவலையாக இருக்கிறது.
அவளிடம் பார்த்து பேசணும் என்று ஆசையாக இருக்கிறது என்று சொல்லிய நிலையில் சக்திவேல் துரோகம் பண்ணிட்டு போன அவளை ஏன் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாய். உடனடியாக தலை முழுகி தொலை என்று திட்டுகிறார். அதற்கு காந்திமதி, என்னதான் இருந்தாலும் நான் பெத்த மகளை எப்படி வெறுக்க முடியும் என்று கண்ணீருடன் வேதனைப்படுகிறார்.
கோமதிக்கு ஆறுதல் சொல்லும் மூன்று மருமகள்கள்
உன்னை சக்திவேல் அப்படி என்றால் இந்த வீட்டில் இருந்து புலம்பாதே வீட்டை விட்டு வெளியே போ என்று அம்மா என்று கூட பார்க்காமல் தரதரவென்று கையைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். பிறகு பழனிச்சாமி, ஏன் அம்மாவிடம் இப்படி நடந்து கொள்கிறாய். அம்மாக்கு போக இடமில்லை என்று நினைக்கிறாயா. நான் கூட்டிட்டு போய் என்னுடன் வைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
அதற்கு சக்திவேல், நீயே அங்கே எடுபிடி வேலையை பார்த்துவிட்டு ஒண்டி பிழைக்கிறாய். இதுல அம்மா வேற கூட்டிட்டு போனா உன்னால பார்த்துக்க முடியுமா என்று அவமானப்படுத்தி பேசுகிறார். இந்த சண்டை எல்லாம் தெருவுக்கு வந்த நிலையில் பாண்டியன் மற்றும் கோமதி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்க்கிறார்கள். பார்த்ததும் அம்மாக்கு இந்த கெதியா என்று கோமதி அழுகிறார்.
பிறகு ராஜியின் அப்பா அம்மாவை கூட்டிட்டு உள்ளே போகிறார். போனதும் சக்திவேல் நீ பண்ணினது தவறுதான் என்று கன்னத்தில் தம்பியை அடிக்கிறார். என்ன இருந்தாலும் அவங்க நம்மளுடைய அம்மா. எதுனாலும் உள்ளே இருந்தே பேசி முடித்திருக்க வேண்டிய விஷயத்தை வெளியில் அவர்களுக்கு தெரியும்படி கொண்டு போனது தவறுதான் என்று சொல்லி அம்மாவிடம் ராஜி அப்பா மன்னிப்பு கேட்கிறார்.
இதற்கு அடுத்து அம்மாக்கு இந்த நிலைமை என்று யோசித்து கோமதி வீட்டுக்குள் அழுது புலம்புகிறார். கிட்டதட்ட 30 வருஷமாக நான் என்னோட அம்மா கூட பேசாமல் இருக்கிறேன். எனக்கும் அவர்களிடம் பேச வேண்டும் பழகனும் என்று ஆசை இருக்காதா? ஏன் அது கூட புரியாமல் இப்படி காட்டுமிராண்டி மாதிரி நடந்து கொள்கிறார் என்று வேதனைப்படுகிறார். இதனை பார்த்த பாண்டியன் பீல் பண்ணி வெளியே வந்து கடைக்கு போக ஆரம்பிக்கிறார்.
போகும்போது சக்திவேல் மற்றும் முத்துவேல் காரில் வந்து பாண்டியன் போவதற்கு இடைஞ்சலாக நிற்கிறார்கள். அப்பொழுது சக்திவேல், பாண்டியனிடம் வம்புக்கு இழுக்கிறார் என்று கதிர் ஆவேசமாக சண்டை போட போகிறார். உள்ளே இருக்கிறது மாமனார் என்று தெரிந்தும் அப்பாவுக்கு ஒரு அவமானம் என்றால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று சண்டைக்கு தயாராகி விட்டார்.
பிறகு பாண்டியன், கதிரை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பி வைக்கிறார். அத்துடன் கடைக்கு போன பாண்டியன், கோமதியை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு மனசு உடைஞ்சு பேசுகிறார். அந்த வகையில் முதல் முறையாக பொண்டாட்டியை நினைத்து அவருடைய உணர்வுக்காகவும் மரியாதை கொடுக்கணும் என்று பாண்டியன் அன்போடு பேசிக் கொள்கிறார். இதற்கிடையில் கோமதி, அம்மாவை நினைத்து பீல் பண்ணி அழும்பொழுது மீனா ராஜி மற்றும் தங்கமயில் ஆறுதலாக பேசி சமாதானப்படுத்துகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்
- மீனாவிடம் உதவி கேட்ட ராஜி, வாயடைத்துப் போன பாண்டியன்
- பாண்டியன் செய்யும் அராஜகத்திற்கு தங்கமயில் கொடுக்கும் தண்டனை
- தங்கமயில் போட்ட பிளானை ஊத்தி மூடிய கோமதி