வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

முதல் முறையாக நன்றி விசுவாசத்தை காட்டிய விஜய்.. அரசியல் ஆதாயத்துக்காக புண்ணியம் சேர்க்கும் தளபதி

Actor Vijay: தற்சமயம் திரை உலகம் மட்டுமல்ல அரசியல் பிரபலங்களின் பார்வையும் விஜய்யை சுற்றி தான் இருக்கிறது. ஏனென்றால் இவருடைய அரசியல் பிரவேசம் நாளுக்கு நாள் தீவிரமாகி கொண்டிருக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டு அரசியல் களம் காண போகும் தளபதி, சீக்கிரமே அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளிவிடுவார்.

இந்த சமயத்தில் விஜய் முதல் முதலாக தனது நன்றி விசுவாசத்தை காட்டி இருக்கிறார். இவர் விஜயகாந்தை பற்றி பல வருடத்திற்கு பிறகு மேடையில் பேசி இருக்கிறார். சமீபத்தில் நடந்த லியோ பட வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஒரே கேப்டன் என்று நீண்ட வருடத்திற்கு அப்புறம், விஜயகாந்தை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.

உடம்பு சரியில்லாத விஜயகாந்தை இதுவரை ஒரு முறை கூட விஜய் நேரில் சென்று பார்த்ததில்லை. அது மட்டுமல்ல விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் பட விழாவிற்கு கேப்டன் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா இருவரும் நேரில் சென்று அழைத்தும் கூட விஜய் வரவில்லை.

Also read: விஜய்யின் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்ட பிரசாந்த்.. நாலா பக்கமும் அஜித்துக்கு செக் வைக்கும் தளபதி

ஆனால் விஜயகாந்தின் மீது தளபதியின் தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது, காரணம் விஜய்யின் சினிமா கேரியருக்கு திருப்பு முனையாக அமைந்த செந்தூரப் பாண்டியன் படத்தில் விஜய் உடன் விஜயகாந்த் நடித்து அவரை வளர்த்து விட்டவர்.

இன்றும் எஸ்ஏசி-க்கு விஜயகாந்தின் மீது தனி மதிப்பு மரியாதை இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் சிறிது காலம் விஜய் மறந்துவிட்டார். இப்போது விஜயகாந்த் பற்றி மேடையில் மறுபடியும் பெருமையுடன் பேசுயது கேப்டன் ரசிகர்களை சந்தோஷப்பட வைத்திருக்கிறது. அரசியலுக்கு வரும் விஜய் நன்றி விசுவாசத்தை காட்டி அரசியல் ஆதாயத்துக்காக புண்ணியம் சேர்க்கிறார்.

Also read: ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை அறைந்த இயக்குனர்.. ரகசியத்தை வெளியில் சொன்ன வில்லன்

Trending News