புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பெண் பித்தராக நடிச்ச சூப்பர் ஸ்டாருக்கு.. இளையராஜா போட்ட காமன் மனசு பாடல்.. எழுதியது யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1981ல் வெளியான படம் நெற்றிக்கண். இதில் இரட்டை வேடத்தில் அப்பா – மகன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். இதில், சரிதா, லட்சுமி, சரத்பாபு, தேங்காய் சீனிவாசன், விஜயசாந்தி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் தந்தை சக்கரவர்த்தி, மகன் சந்தோஷின் காதலியான மேனகாவை அந்தரங்க தொந்தரவு செய்துவிடுவார். அவரையே மகன் கல்யாணம் செய்துவிடுவதால் வீட்டுக்குள் அவர்களுக்குள் நடக்கும் கருத்து மோதல் தான் படம் முழுக்க இருக்கும். மாமனாரை பழிவாங்குவது போலவும், அவரை திருத்துவது போலவும் சரிதா ஒவ்வொரு காட்சியிலும் தோன்றுவார்.

பெண் பித்தன் வேடத்தில் அப்பா கேரக்டரிலும், சாதுவான மகனாகவும் ரஜினி அட்டகாசமாக நடித்திருப்பார். இதில், மாமனாரின் திமிரை அடக்கும் விதமாக ஏட்டிக்குப்போட்டியாக சரிதா நடந்து கொள்வார். இருவரும் ஸ்கிரீன் பேசும் காட்சிகளில் அனல் பறக்கும்.

சூப்பர் ஹிட்டான காமன் மனசு பாடல்!

அப்போது இருவரும் பாடுவதாக‘ ’மாப்பிள்ளைக்கு மாமன் மனசு, மாமனுக்கோ காமன் மனசு’ என்ற பாடல் வரும். இப்பாடலை கண்ணதாசன் எழுதினார்.

இளையராஜா இசையமைத்த இப்பாடல் சூப்பர் ஹிட். மலேசியா வாசுதேவனும், சுசீலாவும் சேர்ந்து இப்பாடலை பாடியிருந்தனர். இதில் மலேசியா வாசுதேவன் ஜதி போட்டு பாடியிருப்பார்.

இன்றளவும் இது ஃபேமஸான பாட்டாக உள்ளது. வயதான பெண் பித்தனாக நடித்துள்ள ரஜினியின் சில்மிஷம், இரட்டை அர்த்தம், இதெல்லாவற்றையும் குறிக்கும் வகையில், சூழ்நிலைக்கு ஏற்ப, மாமனுக்கோ காமன் மனசு என்று மருமகளே பாடுவது போன்ற இப்பாடலுக்கு இளையராஜாவின் அருமையான இசை பொருத்தமான இருந்து என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Trending News